Thalapathy Vijay 69 Salary: விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விஜய் சம்பளம் ரூ.275 கோடியா?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகரான தளபதி விஜய், தனது வரவிருக்கும் தளபதி 69 படத்திற்காக 275 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை அவர் எட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒபலதரப்பட்ட ரசிகர்களை கவரும் விதமாக கமர்ஷியல் படங்களை வழங்குவதன் மூலம் பிரபலமான, விஜயின் புகழ் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் வளர்ந்து, அவரை ஒரு பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. அவர் முழு நேர அரசியலில் களமிறங்குவதற்கு முன்பாக நடிக்கும் கடைசி படம் என்பதால், தளபதி 69 மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்பார்ப்புகளை பணமாக்கும் தயாரிப்பு நிறுவனம்?
கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல பிளாக்பஸ்டர்களை வழங்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான kvn தளபதி 69 படத்தைத் தயாரிக்கிறது. அதோடு, அந்நிறுவனத்திற்கு கோலிவுட்டில் இது முதல் படமாகும். முந்தைய சாதனைகளை முறியடிக்கும் சம்பளத்துடன் விஜய் படத்தை தயாரிப்பதன் மூலம், தளபதி 69 ஷாருக்கானின் முந்தைய வருவாயை முறியடித்துள்ளது. அவர் தனது கடைசி படத்திற்காக ரூ.250 கோடியை சம்பளமாக வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் எட்டியுள்ளார். அவரது கடைசி படம் என்பதால் இதன் மீது நிலவும் பிரமாண்ட எதிர்பார்ப்பை உணர்ந்து, இந்நிறுவனம் தளபதி 69 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
கவனம் ஈர்த்த தளபதி 69 அறிவிப்பு:
தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜனநாயகத்திற்கான தீப்பந்தம் ஏந்தும் நபர் என்ற வாசகத்துடன் , தளபதி 69 படத்திற்கான போஸ்டர் வெளியானது. எச். வினோத் இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் அடிப்படையில் தளபதி 69 படம் அரசியலை ஆழமாக பேசும் என கருதப்படுகிறது.
தி கோட் வெற்றி
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் நடிப்பில், கடைசியாக ட்தி கோட் படம் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே, சுமார் 150 கோடிக்கும் அதிகமாக தி கோட் படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தி கோட் படத்திற்கே விஜய் சுமார் 250 கோடி வரை ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.