விஜயின் மகன் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என விஜயின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். 


விஜய் நடித்து வரும்  ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய மகனான ஜெய்சன் சஞ்சய் என பெயரிடப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியானது. 


 






அந்தப்பதிவில், “  ‘வாரிசு’ படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட வேண்டாம்” என குறிப்பிடப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்தப்பதிவை பலரும் பகிர்ந்ததோடு, செய்தியாகவும் வெளியிட்டு இருந்தனர்.


இந்த நிலையில் விஜயின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்றும் போலிக்கணக்குகளில் இருந்து வெளியாகும் செய்திகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 









தெலுங்கு இயக்குநர் வம்சிபைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.


 






அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.