நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
ஜன நாயகன்:
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து முதல் போஸ்டர் வெளியானது. இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரில் தெரிகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இரண்டாம் லுக் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் லியோ, GOAT திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டி மூதி ஏறி நின்று ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானது. ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை கொண்டாடினர். அதுபோலவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இருந்தது.
இந்த திரைப்படத்தை கே.வி. என். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிரார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இதன் முதல் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில், தற்போது ’நான் ஆணையிட்டால்..’ என்கிற வாசகத்துடன் 2-வது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் நடிப்பில் இருந்து விலகுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் கடைசி திரைப்படத்தை, விஜய்-யின் ப்ரசன்ஸை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமூக கருத்துக்களை வணிக ரீதியாக ஆக்ஷன் படமாக சொல்வதில் கில்லாடியான எச்.வினோத், விஜய்யின் இந்த கடைசி படத்தை வலுவான திரைக்கதையுடன் அரசியல் கருத்துக்களுடன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.