துள்ளாத மனமும் துள்ளும்:


கடந்த 1999 ஆம் ஆண்டு, இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. இந்த படத்தின் கதையை நடிகர் வடிவேலுவை மனதில் வைத்து எழில் எழுதிய நிலையில், எதேர்சையாக விஜய் இந்த படத்தின் கதையை கேட்க அவருக்கு பிடித்து போனதால், அவரே படிப்பதாக கூறினார். கொஞ்சம் காமெடியாகவும் - எஷனலாகவும் எழுபட்ட கதையை அப்படியே விஜய்க்கு ஏற்றாப்போல் மாற்றி படத்தை இயக்கி முடித்தார் எழில்.


இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக, நடிகை சிம்ரன் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில்,  மணிவண்ணன், தாமு, வையாபுரி, மதன் பாபு, பாரி வெங்கட் (டிரவுசர் பாண்டி) உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


வடிவேலுவுக்கு எழுதிய கதை:


ஹீரோவாக இருக்கும் விஜயை, சில தவறான சந்தர்ப்பங்களில் ஹீரோயின் சந்திப்பதால் அவரை ஒரு ரவுடியாகவே பார்க்கிறார். விஜய்யால் தான் ஹீரோயின் கண் பார்வையும் பறிபோகிறது. பின்னர் சிம்ரனை அவர் ஆசைப்பட்டது போல் ஒரு கலெக்டராக்கி பார்க்க விஜய் ஆசை படும் நிலையில், செய்யாத குற்றத்திற்கு சிறைக்கு செல்ல நேர்கிறது. அதன் பிறகு சிறையிலிருந்து வெளியில் வரும் ஹீரோ, ஹீரோயினை தேடி ஊருக்கு வருகிறார். இதற்கிடையில் ரயில் பயணத்தின் போது கல்லூரி மாணவர்களை சந்தித்து தன்னுடைய கதையை கூறுவது போல் தான் இந்த படத்தையே இயக்கி இருப்பார் எழில்.  இறுதியில் ஹீரோ - ஹீரோயின் இணைந்தார்களா? இல்லையா என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ்.


டவுசர் பாண்டி:


இப்படிப்பட்ட விஜய்க்கு திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அதே போல் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்தப் படத்தில் டிரவுசர் பாண்டி ரோலில் வந்து ஐஸ் ஹவுஸுக்கு வழி சொன்னவர் தான் காமெடி பாரி வெங்கட். இந்த படத்தில் டிரவுசர் பாண்டியே என்கிற ரோலில் நடிக்க, அதுவே அவரின் அடையாளமாகவும் மாறியது. 




இந்த நிலையில் தான் டிரவுசர் பாண்டி குறித்து காமெடி நடிகர் காக்கா கோபால், யாருக்கும் தெரியாத முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது, நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட காலங்களில் பாரி வெங்கட் தான் எனக்கு உதவி செய்தார். 


தளபதி செய்த உதவி:


நான் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு, அதனை முடித்து சென்னைக்கு வந்தேன். அப்போது பாரி வெங்கட்டை காணவில்லை என்று ஒரு வாரமாக தேடிக் கொண்டு இருந்தாங்க. ஆனால், அவர் பெரம்பலூர் அருகில் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டதாக செய்தி வந்தது. என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் அவரோட வீட்டிற்கு சென்றோம். அப்போது விஜய்யும், அவரது அப்பாவும் பாரி வெங்கட் வீட்டிற்கு வந்து கண்ணீருடன்  ஆறுதல் சொன்னாங்க. அவரது மனைவியிடம் ரூ.1 லட்சம் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். அப்படி ஒரு நிகழ்வை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.