தளபதி 69 படத்தில் விஜய்  நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கவிருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


விஜய் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி


 நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. சினேகா, பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், லைலா, மீனாக்‌ஷி செளதரி, பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இலங்கை மற்றும் இஸ்தான்புல் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது.


சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் விஜய் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்து. விஜயின் அடுத்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இதற்கு முன்பாக தான் விஜயிடம் இரண்டு முறை கதை சொன்னதாகவும் அந்த இரண்டு கதைகளும் விஜய்க்கு பிடிக்கவில்லை என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இதனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப் படாமல் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இந்த கூட்டணி இணைவதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.


தளபதி 69


 விஜய்யின் அடுத்தப் படமான தளபதி 69 இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.  கார்த்திக் சுப்பாராஜ்  இயக்கத்தில் சமீபத்தில்  வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய்யுடன் அவர் இணைய இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.







Malaikottai Vaaliban Review: மல்யுத்தமும் நாட்டார் கதையும்: மோகன்லாலின் “மலைக்கோட்டை வாலிபன்” பட விமர்சனம்!