தளபதி விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம்…திரைக்கு வருவதற்கு முன்பே பெருமளவில் கொண்டாடப்படும் படங்கள் தளபதி விஜய்யின் திரைப்படங்கள். தற்போது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் தளபதி விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் தளபதி 67. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வானவில் உயர்ந்து உள்ளது. நான்கு படங்களில் தனது திறமையை மொத்த திரையுலகிற்கும் நிரூபித்துக் காட்டியவர் லோகேஷ் கனகராஜ்.
புதிய அப்டேட்:
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் கைக்கூடிய இந்த காம்போ, மீண்டும் இணைய உள்ள திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த போவதற்காக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து கொண்டு, கதையில் அதிகம் கவனம் செலுத்த போவதாக இயக்குநர் லோகேஷ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நம்பகமான தரவுகளின் படி, இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இசை, திரைக்கதையில் ரத்தினகுமார் பங்களிப்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாநாயகிகள் என நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைய உள்ளனர்.
அவர் ஒரு மனிதர் அல்ல!
பிரித்விராஜ், சமந்தா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இன்னும் பல நட்சத்திரங்கள் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகி உள்ள புதிய அப்டேட் என்னவென்றால்… விஜய்யுடன் ஒரு முக்கியமான புதுமுகம் நடிக்க உள்ளார்.ஏற்கனவே மலையாளத்தில் அறிமுகமான இவர், தளபதி 67 மூலம் தமிழில் களமிறங்குகிறார். அவர் ஒரு மனிதர் அல்ல ஒரு நாய். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரேட் டேன் வகை நாய் ஒன்று நடிக்க உள்ளது. இந்த நாய் ஏற்கனவே மலையாள திரைப்படமான பசில் ஜோசப்பின் 'பலத்து ஜன்வார்' திரைப்படத்தில் நடித்துள்ளது. அந்த திரைப்படம் செப்டம்பர் இரண்டாம் நாள் வெளியாக உள்ளது. இந்த நாயின் உரிமையாளர் நேர்காணல் ஒன்றில், அவரது நாய் தளபதி விஜய்யின் திரைபடத்திற்காக டிசம்பர் மாதம் முதல் புக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே,ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று நடித்திருக்கும். வில்லனை கண்டுபிடிக்கும் முக்கிய காட்சியில் அந்த நாய் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.