தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும், தில் ராஜூ தயாரிப்பில், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா,  நடிகர் மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி இந்தப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் நடிகர் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.   


அதன்பிறகு, தளபதி 66 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியானது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. முன்னதாக இந்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க 80-களில் பிரபல நடிகராக வலம் வந்த, மோகனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது. 



இந்தநிலையில், ‘தளபதி 66’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. அந்த பூஜை விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அதில் நடிகர் சரத்குமார், “சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அப்போதே கணித்து கூறினேன். அது இப்போது நடந்துவிட்டது. நான் சரியாக கணித்துள்ளத்தை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதை விஜய்யும் நினைவு வைத்து பேசியது சந்தோஷமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். 


தளபதி 66 எப்படியான படம்..? 


விஜய் 66 , செண்டிமெண்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி “படத்தில் மனித உறவுகள் மற்றும் , உணர்ச்சிகள் இரண்டிற்கும் இடமளித்து கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும்  அவரின் ஸ்டார் வேல்யூவையும் மனதில் வைத்துதான் கதை எழுதியிருக்கிறேன் “ என தெரிவித்திருந்தார். 


தயாரிப்பாளர் கூறும்போது, “ 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன் என நடிகர் விஜய் என்னிடம் கூறினார். தளபதி 66 படம் மார்ச் மாதம் தொடங்கும். தீபாவளி அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண