நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’பீஸ்ட்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளர்.  வெள்ளை நிற உடை அணிந்து விஜய் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்று வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படமான எக்ஸ் மென் வொல்வரைன் கதாப்பாத்திரத்தைத் தழுவியிருப்பதாக ஆன்லைனில் விமர்சனம் எழுந்துள்ளது.


ஹாலிவுட்டின் ஹிட் பட வரிசைகளில் ஒன்றான எக்ஸ்-மென் படங்களில்(X-men series) எக்ஸ்--மென் ஆரிஜின்: வொல்வரைன் (X-Men Origins: Wolverine) படத்துக்கான கதாப்பாத்திரம் இதே லுக்கில்தான் இருக்கும். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஹ்யூக் ஜாக்மேன். மரபணு மாற்றத்தால் விநோத ஆற்றல்களைப் பெற்ற சூப்பர்ஹீரோ மனிதர்களைப் பற்றிய திரைப்பட வரிசை எக்ஸ்-மென். ஹுயூக் ஜாக்மென், விலங்கினமான ஓநாய்களின் அபூர்வ ஆற்றலை உடைய சூப்பர் ஹீரோவாக நடித்திருப்பார். நடிகர் விஜயின் திரைப்படமும்  ’பீஸ்ட்’ அதாவது ‘மிருகம்’  என்றே தலைப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் ‘தளபதி 65’ குழு அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘BEAST' என பெயரிடப்பட்டுள்ள விஜய் 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் டிரெண்டாக தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வரும் அப்டேட்களால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய். வேகமாக ஷூட்டிங் சென்றுகொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் சோர்ந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்டேட் செய்தியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்

விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதியான இன்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் காலை வெளியிட்டது. துப்பாக்கியில் இருந்து புல்லட் பாய்ந்து சென்று தளபதி 65 என்று தோன்றும் முன்னோட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த முன்னோட்ட வீடியோவையே ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 65 படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் . மேலும் இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் , மேலும் இந்த அழகான நடிகை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.தளபதி 65 குறித்த அப்டேட்டுகள் அடுத்தது கசிந்து வருவதால் விஜய் ரசிகர்கள் தற்போது குஷியடைந்து வருகின்றனர். அதே நேரத்தின் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.


Also Read : பள்ளி ஆன் லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் அறிவிப்பு: உடை விவகாரத்தில் கட்டுப்பாடு!