Thalaivar 171: ஆட்டத்தை ஆரம்பித்த வெள்ளி விழா நாயகன்.. ரஜினிக்கு வில்லனாகும் மைக் மோகன்..!

சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்

Continues below advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தில் வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

தலைவர் 171

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். இவர் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்துடன் புதிய படம் ஒன்றில் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டை பயிற்சி அமைக்கின்றனர். தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினி கையில் ரோலக்ஸ் வாட்ச் கொண்ட கைவிலங்கு மாட்டியிருப்பது போல புகைப்படம் இடம் பெற்றிருந்தது. 

நிச்சயமாக இப்படம் எல்.சி.யு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைவரது பார்வையும் தலைவர் 171வது படத்தின் மீது திரும்பியுள்ளது. இதனிடையே இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷாரூக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. 

தமிழ் சினிமாவில் 80களின் காலக்கட்டத்தில் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். இவர் பெரும்பாலான படங்களில் மைக்குடன் தோன்றியதால் “மைக்” மோகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஒரு காலத்திற்கு பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் வேட்டையன் ரிலீஸ்

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், பஹத் ஃபாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola