தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படங்கள் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்தன. அப்படி பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான திரைப்படம் தான் 'தலைவா'. 2013ம் ஆண்டு  ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய், அமலா பால், சந்தானம், சத்யராஜ், சுப்பு பஞ்சு அருணாச்சலம், பொன்னவண்ணன், சுரேஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டராக செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ராகினி நந்தவானி. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மெயின் ஹீரோயினனான அமலா பாலை காட்டிலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


 




உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ராகினி நந்தவாணி. 2005  ஆண்டு சின்னத்திரை மூலம் திரையில் என்ட்ரி கொடுத்தார். சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சியில் பிரபலமான தொடரான “கௌஷிக் கி பாஞ்ச பஹுயின்” நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ராகினியும் பிரபலமானார். அதன் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


2013ம் ஆண்டு வெளியான "டேராடூன் டைரி" படத்தில் ஹீரோயினராக  அறிமுகமானார். அது தான் அவருக்கு 'தலைவா' படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து தெலுங்கு, மராத்தி, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராகினிக்கு 2017ம் ஆண்டுக்கு மேல் வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பினார். 


 




சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராகினி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் 'தலைவா' பட கௌரியா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  ஒரே படத்தோட தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனாலும் இன்றும் ரசிகர்கள் ராகினியை கௌரியாக நினைவில் வைத்துள்ளார்கள். 


மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் ராகினியை மீண்டும் தமிழ் சினிமாவில் பார்க்க வாய்ப்புகள் உள்ளன.