திரைப்படங்களில் துணை நடிகராக பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. சின்னத்திரையில் நகைச்சுவை தொடர்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார் தாடி பாலாஜி.  


பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் அரக்கோணத்தை சேர்ந்த லக்ஷயா ஸ்ரீ என்ற மாணவி தமிழ் படத்தில் முதலிடம் பிடித்ததை பாராட்டும் வகையில் அவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அந்த மாணவியை வாழ்த்தினார். தன்னால் முடிந்த சிறிய உதவிகளை அந்த மாணவிக்காக செய்வதாகவும் தெரிவித்துள்ளர் நடிகர் தாடி பாலாஜி. அந்த சமயத்தில் நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என கூறியிருந்தார்.



அதனை தொடர்ந்து பரோ உபகார அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்து கோடை வெயிலுக்கு இதமாக மோர், தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் வழங்கினார். அந்த சமயத்தில்  பத்திரிகையாளர்களிடம் அரசியலில் வருவது குறித்து பேசியிருந்தார். "தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாகவும், புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவார் என்பதையும் ஒரு வித்தியாசமான பாலாஜியை பார்க்கலாம்” என்றும் தெரிவித்து இருந்தார்


மேலும் அவர் மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கும் வகையில் மாணவ மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு கல்லூரியாக இந்த வேகாத வெயிலில் அலைவதை பார்த்தாவது மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என பேசியிருந்தார். அதே போல போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அவர்களாகவே தங்களுது உடல் நிலையை எண்ணி திருந்தினால் மட்டுமே அதில் இருந்து அவர்களால் விடுபட முடியும். நான் தான் அதற்கு சரியான உதாரணம்” என பேசியிருந்தார்.