ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ருக்மினி வசந்த் , குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கான ஹைதராபாத் ப்ரோமோஷனின் போது நடிகர் ரிஷப் ஷெட்டி தெலுங்கில் பேசாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்தாரா படத்தை புறக்கணிக்கும் தெலுங்கு ரசிகர்கள்
காந்தாரா படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாதில் நடைபெற்றது. இதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பு விருந்தினராக கலனதுகொண்டார். ஜூனியர் என்.டி.ஆர் பற்றி காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேசுகையில் தெலுங்கில் பேசாமல் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசினார். இதனால் ரசிகர்கள் அதிருபதியடைந்தனர். முன்னதாக பவன் கல்யாணின் ஓஜி படத்தின் போது பெங்களூரில் தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இப்படியான நிலையில் காந்தாரா படத்தை புறக்கணிக்கச் சொல்லி தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் BoycottKantaraChapter1 என்கிற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
தெலுங்கு ப்ரோமோஷனின் போது தெலுங்கு மொழியில் பேசாமல் தமிழ் மொழியில் பேசி ரசிகர்களை அவமதித்துள்ளதாகவும் இதனால் காந்தாரா படக்குழு ரசிகர்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா அத்தியாயம் 1 படத்திற்கான முன்பதிவுகள் கர்நாடகாவில் 150,000 டிக்கெட்டுகளைத் கடந்துள்ளன. முதல் நாளுக்கு ₹5.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன, அக்டோபர் 2, 2025 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் முன்னதாக வட இந்தியா மற்றும் கேரளாவில் மற்றும் சர்வதேச சந்தைகளிலும் வலுவான டிக்கெட் விற்பனை பதிவாகியுள்ளது.