தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விஷால் லெட்டர் எழுதி வைத்த விஷயத்தை ருக்மணி, இசையிடம் சொல்லாமல் மறைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
என்ன நடக்கும்?
அதாவது, மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்காக சுபத்ராவின் குடும்பத்தினர் கூடி இருக்கின்றனர், இசையின் குடும்பத்திற்காக காத்திருக்க விஷால் எழுதி வைத்த லெட்டரை படித்து இசை நிச்சயம் வர மாட்டாள் என்று கனவு காண்கிறான்.
மறுபக்கம் சிந்தாமணி, பானுமதி ஆகியோர் இசை கண்டிப்பா வர வாய்ப்பு இருக்கு.. அவ இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் வேற விட்டு இருக்கா என்று பேசி கொள்கின்றனர்.
பட்டம்மா பாட்டி:
இசையின் குடும்பத்தினர் மண்டபத்திற்கு கிளம்ப தயாராக சித்தி ருக்மணி என் பொண்ணே அந்த வீட்டிற்கு மருமகளாகல, நான் எதுக்கு அங்க வரணும், வர முடியாது என்று வீம்பு பிடிக்கிறாள்.
மண்டபத்தில் பட்டம்மாள் என்ற பாட்டி என்ட்ரி கொடுக்க அவரை பார்த்ததும் விஷால், சிந்தாமணி, பானுமதி ஆகியோர் ஷாக் ஆகின்றனர். உள்ளே வந்த பாட்டி ராகவ்வை பார்த்து நீ நினைக்குற மாதிரி கல்யாணம் நடக்கும் என்று வாழ்த்துகிறார்.
விஷாலை பார்த்து நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்காது என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.