தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். பாரிஜாதம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராகவ் வர்ஷினியை கடைக்கு அழைத்துச் சென்று , நான்கைந்து புடவைகளை எடுத்துக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

மருதாணியில் பெயர் எழுதிய இசை:

அதாவது வீட்டுக்கு வரும் வர்ஷினி ராகவ் தன்னை கடைக்கு அழைத்துச் சென்று புடவைகளை எடுத்துக் கொடுத்ததாக சொல்லி சந்தோஷப்படுகிறாள். டெலிவரி பாய் ஒருவன் காலிங் பெல் அடித்த ராகவ் மற்றும் விஷால் என இருவரும் சேர்ந்து மருதாணியை அனுப்பி வைத்துள்ளதாக சொல்லிக் கொடுத்துவிட்டு செல்கிறான். 

மறுபக்கம் ராகவ் தங்கை பல்லவியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல அவள் ராகவ்வின் கையைப் பிடித்து மருதாணியில் வர்ஷினி என பெயர் எழுதி பக்கத்தில் ஒரு ஹார்ட் போட்டு விடுகிறாள். ராகவ் இதை போட்டோ எடுத்து வர்ஷினிக்கு அனுப்பி வைக்க வர்ஷினி இசையிடம் சொல்ல அவள் மருதாணியில் விஷால் என பெயர் எழுதி அதை அவனுக்கு அனுப்பி வைக்கிறாள். 

Continues below advertisement

இசை பெயரை பச்சை குத்திய டாட்டூ:

இதனால் கடுப்பாகும் விஷால் நேராக டாட்டூ ஷோரூமுக்கு சென்று டாட்டூ போட வேண்டும் என்று சொல்கிறான். டாட்டூ பாய் என்ன பெயர் போட வேண்டும் என்று கேட்க போனை பார்த்துக் கொண்டு விஷால் இசை என்று சொல்லிக்கிட்ட இசை என்ற பெயரை தான் பச்சை குத்த வேண்டும் என்று நினைத்து பாட்டூ போட்டு விடுகிறான். 

அதை போட்டோவும் எடுத்து இசைக்கு அனுப்பி வைக்க இசை இதை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். பிறகு விஷால் மீண்டும் நண்பர்களின் ரூமுக்கு வர நண்பர்கள் இதை பார்த்து என்னோட இசை என்று டாட்டூ போட்டு இருக்க என்று சொல்ல விஷால் ஷாக்காகி கடைக்காரனுக்கு போன் போட்டு திட்டுகிறான். 

அடுத்ததாக தேவகி பாட்டி சுபத்ராவிடம் பானுமதி வீட்டுக்கு அழைத்து வருவது பற்றி பேச சுபத்ரா அது குறித்து யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.