Ninaithen Vanthai :சுடரை வளைத்து பிடித்த வேலு! எழிலை விரட்டி விடும் மனோகரி - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சுடர் காய்ச்சலில் தவிக்க எழில் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து பார்த்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

எழில் ஆறுதல்:

அதாவது, மறுநாள் காலையிலும் சுடருக்கு காய்ச்சல் குறையாததால் எழில் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான், இதை சமையல்காரி செல்வி பார்த்து விடுகிறாள். உடனே அவள் மனோகரியிடம் விஷயத்தை சொல்ல அவள் டென்சன் ஆகிறாள்.

ஹாஸ்பிட்டலுக்கு வந்த எழில் சுடருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறான், சுடர் காய்ச்சலில் பயப்பட அவளை பக்கத்தில் இருந்த எழில் பயப்படாதீங்க, தமிழ் நான் பக்கத்தில் தான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். மறுபக்கம் வேலு சுடரை தேடி ஹாஸ்பிடலுக்கு வர முடிவெடுக்கிறான்.

துரத்தும் மனோகரி:

அடுத்ததாக மனோகரி ஹாஸ்பிடலுக்கு வந்து எழிலிடம் நீங்க போங்க எழில் நான் சுடரை பார்த்துக்கறேன் என்று பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள். எழில் வெளியேறியதும் மனோகரி சுடரிடம் சென்று அதான் காய்ச்சல் போய்டுச்சுல நீயும் கிளம்பு என துரத்தி விடுகிறாள்.

இதையடுத்து சுடர் வீட்டிற்கு கிளம்பி வர வேலு ஹாஸ்பிடலுக்கு வர சுடரை பார்த்து விடுகிறான், உடனே அவளை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement