Karthigai Deepam: சீன் போடும் ஜாக்.. சபதம் எடுத்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜாக் செங்கற்களை மொட்டை மாடியில் உடைத்து போட்டது போல டிராமா செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சீன் போடும் ஜாக்:
அதாவது ஜாக் இது எல்லாத்தையும் நான் தான் உடைச்சு போட்டேன், தினமும் நான் இப்படி உடற்பயிற்சி செய்வேன் என பில்டப் கொடுக்கிறான். அதன் பிறகு தண்ணீர் கேட்க ரேவதி சுடுதண்ணீரை கொண்டு வந்து கொடுக்க அதை அப்படியே தூக்கி ஊற்றிக் கொள்ள சூடு தாங்காமல் தவிக்கிறான்.
சபதம் எடுத்த சந்திரகலா:
பிறகு வீட்டில் சந்திரகலா அபிராமி நினைவிடத்தில் பெருக்கி சுத்தம் செய்த வீடியோவை போட்டு காட்ட சந்திரகலா கடுப்பாகிறாள். இதற்கு காரணமான கார்த்தியை சும்மா விடக்கூடாது என முடிவு எடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























