தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி வெளிநாடு போக முடியாமல் திரும்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பிராத்தல் கேசில் சிக்கப்போகும் சுவாதி:
அதாவது முத்துபாண்டியும் சிவனாண்டியும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண் சுவாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் இசையமைப்பாளர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறாள்.
இங்கே ஒரு இன்டெர்வியூ நடப்பது போல் செட்டப் செய்து வைக்கின்றனர். ஸ்வாதி வந்ததும் அவளை பிராத்தல் கேஸில் சிக்க வைக்க திட்டமிடுகின்றனர்.
ஹோட்டல் ரூமில் சுவாதி:
விஷயம் அறியாத ஸ்வாதி ஹோட்டலுக்கு கிளம்பி வர அவளது தோழி ரேவதிக்கு போன் செய்து சுவாதி காலேஜ் வரல போனும் எடுக்கல என்னாச்சு என்று விசாரிக்கிறாள். உடனே ரேவதி கார்த்தியிடம் விஷயத்தை சொல்ல அவனுக்குள் ஏதோ சந்தேகம் உருவாகிறது.
நேற்று ஸ்வாதி வைத்திருந்த விசிட்டிங் கார்டில் என்ன அட்ரஸ் இருந்தது என்று விசாரித்து அந்த ஹோட்டலுக்கு கிளம்பி வருகிறான். ஸ்வாதி இந்த ஹோட்டலுக்கு வந்து விசாரித்து ரூமிற்கு வருகிறாள்.
காப்பாற்றுவானா கார்த்திக்?
அவளுக்கு ஜூஸ் கொடுக்க அதை குடித்த ஸ்வாதி மயங்கி விழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.