தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். ரேவதிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு அவரது உடல்நிலை குணம் அடைந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.
ரேவதியை கொல்ல சதி:
அதாவது கோவிலில் பரமேஸ்வரி பாட்டி, ரோகினி, துர்கா என மூவரும் ரேவதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டி கொண்டு பிராத்தனை செய்கின்றனர்.
தொடர்ந்து மூன்று பேரும் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வந்து பரிகாரம் செய்கின்றனர். இங்கே மாயா, காளியம்மா ஆகியோர் ரேவதியை கொல்ல திட்டமிட கார்த்திக் அவர்களின் அணைத்து திட்டங்களையும் முறியடிக்கிறான்.
அடுத்து ரேவதிக்கு ஆப்ரேஷன் நடந்தபடி இருக்க கார்த்திக் கடவுளிடம் பிராத்தனை செய்கிறான். இறுதியாக ரேவதிக்கு ஆப்ரேசன் நல்லபடியாக நடந்து முடிய கார்த்திக் காளியம்மா வீட்டிற்கு வருகிறான்.
போலீசிடம் இருந்து எஸ்கேப் ஆகிய மாயா:
சிவனாண்டி, முத்துவேலை பிடித்து அடித்து மாயாவை வர வைத்து போலீசிடம் ஒப்படைக்க மாயா போலீஸ் பிடியில் இருந்து எஸ்கேப் ஆகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.