Idhayam Serial Update : தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதியையும் தமிழையும் விட்டுப்போக மாட்டேன் என்று பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஆபிசில் ஜெனரல் மீட்டிங் ஒன்று நடக்க அடுத்து பேங்க் கிளம்பி செல்லும் பாரதி போனை மறந்து வைத்துவிட்டு சென்று விடுகிறாள். அதனை தொடர்ந்து அவளுக்கு தமிழின் ஸ்கூலில் இருந்து ஒரு போன் கால் வர லதா எடுக்க தமிழோட பேரன்ட்ஸ் உடனடியாக ஸ்கூல் வாங்க என்று சொல்லி போனை வைத்து விட லதா பதறுகிறாள்.
அப்போது அங்கு வரும் ஆதி லதாவை பார்த்து என்னாச்சு என்று கேட்க போன் கால் வந்த விஷயத்தை சொல்ல ஆதி நான் உடனடியாக ஸ்கூல் போறேன். நீ பாரதி வந்ததும் சொல்லிடு என்று கிளம்பி வருகிறான், ஆதி ஸ்கூல் வர அவன் தான் தமிழுக்கு அப்பா என நினைத்து கொள்கின்றனர்.
தமிழ் பென்சிலால் ஒரு குழந்தையை குத்தி விட அந்த குழந்தைக்கு ரத்தம் வந்து விட்டதாக பேரன்ட்ஸ் வந்து சத்தம் போடுகின்றனர். ஆதி தமிழை அந்த குழந்தையிடம் மன்னிப்பு கேட்க சொல்ல தமிழ் முடியாது என்று மறுக்க அப்படினா நான் உன்கிட்ட பேச மாட்டேன் என்று கோபப்பட்ட வந்து விடுகிறான். பாரதியும் அங்கு வந்து விட தமிழ் என் பிரண்டை பேச சொல்லுமா என்று அழுகிறாள்.
பாரதி கூப்பிட்டும் ஆதி பேசாமல் சென்று விட வீட்டிற்கு வந்த பிறகும் தமிழ் அழுது கொண்டே இருக்க பாரதி ஆதிக்கு போன் செய்து என் மேல இருக்க கோபத்தை குழந்தை கிட்ட காட்டாதீங்க, அவ சாப்பிட கூட இல்ல என்று சொல்லியும் ஆதி பேசாமல் இருக்கிறான். மறுநாள் காலையில் தமிழ் ஸ்கூலுக்கு வந்ததும் அந்த குழந்தையை கட்டிப்பிடித்து சாரி கேட்க குழந்தையின் பேரன்ட்ஸ் ஆதி ஒரு நல்ல அப்பா என்று பாராட்ட பாரதிக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இதனால் ஆபீஸ் வந்த அவள் ஆதியிடம் நன்றி சொல்ல முடிவெடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.