ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் முத்துப்பாண்டியுடன் சண்முகம் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்து விட்டு பரணியை கூட்டிக் கொண்டு சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் என மூவரும் டைலர் கடைக்கு வந்து கல்யாணத்திற்காக ஜாக்கெட் தைக்க சொல்லி கொடுக்கின்றனர். அடுத்ததாக சண்முகம் கனியை கூட்டிக்கொண்டு இதே டைலர் கடைக்கு வருகிறான்.பரணி, பாக்கியம், சிவபாலன் கிளம்பிச் சென்று விட கனி இசக்கி உடன் போன் பேச செல்ல சண்முகம் கடையை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்க அப்போது செல்வமும் அவனது அம்மாவும் இதே டைலர் கடைக்கு வருகின்றனர்.


ஜாக்கெட்டை கொடுத்து அளவு எதுவும் இல்லாமல் ஒல்லியா இருப்பா அதுக்கு ஏத்த மாதிரி தைக்கணும் என்று சொல்ல டைலர் அளவு எதுவும் இல்லாம எப்படி தைக்கிறது என கேள்வி கேட்கிறார். அங்கே பரணியின் புடவை இருப்பதை பார்த்து இது யார் கொடுத்தது என கேட்க சௌந்தரபாண்டி ஐயாவோட பொண்ணு பரணி கொடுத்தாங்க என்று சொல்ல அதே அளவுல அப்படியே இந்த ஜாக்கெட்டையும் தைத்து கொடு என்று கொடுத்து விட்டு செல்கின்றனர்.


இதை தொலைவில் இருந்து பார்த்த சண்முகத்திற்கு சந்தேகம் வருகிறது. அடுத்து சண்முகம் கனியும் காய்கறி வாங்க வண்டியில் சென்று கொண்டிருக்க இதே யோசனையில் வண்டி ஓட்டும் சண்முகம் கடையை தாண்டி செல்ல கனி கடை வந்துடுச்சு என்று சொல்லி சண்முகத்தை நிறுத்துகிறாள்.மறுபக்கம் முத்துப்பாண்டி இரண்டு ரவுடிகளை போலீஸ் கெட்டப்புக்கு மாற்றி ரத்னாவின் புகைப்படத்தை காட்டி இவளுக்கும் எனக்கும் தான் கல்யாணம், நான் சொல்லும்போது இவளை தூக்கிடனும் என்று சொல்கிறான்.


மேலும் இவர்களை ஏற்கனவே சண்முகம் வீட்டு வாசலில் காவலுக்கு இருந்த காவலர்களுக்கு பதிலாக மாற்றி விடுகிறான். சண்முகமும் கனியும் வீட்டுக்கு வர இவர்கள் புதிதாக இருப்பதை பார்த்து விசாரிக்க முத்துப்பாண்டி ஐயா காவலுக்கு இருக்க சொன்னதாக சொல்ல சண்முகத்துக்கு சந்தேகம் அதிகமாகிறது.அதைத் தொடர்ந்து பரணியின் கல்யாண வேலைகள் அனைத்தும் ஜோராக நடக்க எல்லோரும் மண்டபத்திற்கு வந்து இறங்க பரணி ஏற்பாடுகளை பார்த்து வியக்க பாத்திரக்கடைக்கார மகன் செல்வம் தூரத்திலிருந்து பரணியை பார்த்தபடி இருக்கிறான்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.