Anna Serial: கரை ஒதுங்கிய செருப்பு! உயிரிழந்துவிட்டாளா ரத்னா? திடுக் திருப்பங்களுடன் அண்ணா சீரியல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் ரத்னா மாயமான நிலையில், அவரது செருப்பு கரை ஒதுங்கியதால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்குகிறது.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமான செந்தில் இதில் கதாநாயனாக நடிக்கிறார். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள தொடர் இந்த தொடர் ஆகும். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா கடலுக்குள் இறங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Continues below advertisement

மாயமான ரத்னா:

ரத்னாவை காணாமல் சண்முகம் உட்பட எல்லோரும் அவளை தேடி அலைகின்றனர். தங்கையை காணாமல் ஒரு அண்ணனாக சண்முகம் பதற்றத்தில் நடுங்குகிறான். இந்த சமயத்தில் இன்னொரு பக்கம் போலீசார் கடற்கரைக்கு ரோந்துக்கு செல்கின்றனர். அப்போது ஒரு பை கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதில் இருக்கும் போன் நம்பருக்கு போன் செய்கின்றனர்.

கரை ஒதுங்கிய செருப்பு:

சண்முகத்துக்கு போன் வர ஒரு பேக் கரை ஒதுங்கி இருப்பதாக சொலலவும்,  ரத்னா எதுக்கு கடற்கரைக்கு போனா? என பதறி அடித்து பயத்தில் ஓடி வருகின்றான். அவனுடன் அவனது சகோதரிகளும் ஓடி வருகிறார்கள்.   "ரத்னா கடைசியா இங்கதான் வந்திருக்கா‌‌.. பேக்கை தவற விட்டு இருக்கா" எனவே அவளை தேடிக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் ரத்னாவின் செப்பல் கரை ஒதுங்க அவள் இறந்து விட்டாள் என மொத்த குடும்பமும் முடிவு செய்து விடுகிறது. 

இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆவேசத்தில் சண்முகம் ஸ்டேஷனில் வெங்கடேஷ் சட்டையைப் பிடித்து கோபப்படுகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola