ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அன்னத்தின் மீது திருட்டு பழி விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அமுதா வடிவேலு  இடுப்பில் சொருகியிருக்கும் பணத்தை பார்த்து விட்டு அவன் சட்டைப் பையை பார்க்க அதில் நகை கடை ரசீது இருப்பதை பார்த்து ஷாக்காகிறாள்.


அதனை தொடர்ந்து அமுதா அன்னலட்சுமியிடமும் மாணிக்கத்திடமும் வடிவேலு தான் ஒரு நகையை எடுத்து அடகு கடையில் வைத்திருப்பதாக சொல்லி மாணிக்கமும் அமுதாவும் அடகு கடைக்கு செல்கின்றனர்.


மாணிக்கம் அடகு கடைக்காரரிடம் வடிவேலு கொண்டு வந்து வைத்தது திருட்டு நகை என்று சொல்ல அமுதா மிச்சமிருந்த பணத்தை கொடுத்து விட்டு நகையை கேட்கிறாள்.மாணிக்கம் அமுதாவிடம் நகையை நேரடியாக அந்த வீட்டு ஓனரிடம் குடுத்து விடலாம் என சொல்ல, அமுதா அது சரி வராது, நகையை அத்தை திருடலை இதுக்கெல்லாம் காரணம் பழனி தான்னு நாம நிரூபிக்கனும் என சொல்லிவிட்டு அவரிடம் ஒரு ஐடியா சொல்கிறாள்.


அதை தொடர்ந்து வீட்டில் அன்னலட்சுமி இன்னைக்கு என்னை அரெஸ்ட் பண்ண போறாங்க நம்ம குடும்ப மானமே போகப் போவது என புலம்புகிறாள்.வீட்டிற்கு இன்ஸ்பெக்டர், பழனி, வீட்டு ஓனரும் வர இன்ஸ்பெக்டர் காணாம போன அந்த நகை கிடைச்சிருச்சா, இல்ல அரெஸ்ட் பண்ணவா என கேட்க இன்ஸ்பெக்டரிடம் அமுதா நகையை கொடுக்கிறாள்.


இன்ஸ்பெக்டர் நேத்து இல்லேன்னு சொன்னீங்க இப்ப எப்படி வந்துச்சு என கேட்கிறார். மேலும் நகை ஓனர் தான் இனிமே முடிவு பண்ணனும் என சொல்ல, அவர் நான் கேஸ் குடுக்குறேன் என சொல்ல, பழனி அன்னத்தை அரஸ்ட் பண்ண சொல்கிறான்.அமுதா ஒரு 5 நிமிஷம் கழிச்சி அரெஸ்ட் பண்ணுங்க என சொல்ல இன்ஸ்பெக்டருக்கு போன் வருகிறது. பழனியின் நண்பன் லிங்கம் இன்ஸ்பெக்டரிடம் நகையை திருடுனது நான் தான், திருட சொன்னது பழனி தான் என சொல்ல பழனி புரியாமல் பார்க்கிறான்.


அமுதா இப்ப உங்க கடமையை தாராளமா செய்யலாம் என சொல்ல, இன்ஸ்பெக்டர் பழனியின் கன்னத்தில் அறைய பழனி நான் என்ன சார் பண்ணுனேன் என கேக்க, நீ திருடிட்டு இவங்க மேல பழியை போடுறியா என சொல்லி இழுத்து செல்கிறார்.செல்வம் லிங்கத்தை அடித்து இழுத்து செந்தில் வீட்டுக்கு அழைத்து வர ப்ளாஷ் கட்டில் செல்வம் லிங்கம் வீட்டிற்கு சென்று அவனை மிரட்டி உண்மையை சொல்ல சொன்னது தெரிய வருகிறது.அதனை தொடர்ந்து அமுதா செல்வாவிற்கு நன்றி சொல்ல செல்வா கடவுள் எப்பவும் நல்லவங்களை கை விட மாட்டான் என சொல்லிவிட்டு நகர்கிறார்.


அதனை தொடர்ந்து அன்னலட்சுமி கதிரேசன் போட்டோ முன் நின்று நம்ம குடும்பத்துக்கு வர இருந்த அவமானத்தை நம்ம மருமக தடுத்து நிறுத்திட்டா என சொல்ல அமுதா அன்னலட்சுமியிடம் இனிமே நீங்க வேலைக்கு போக கூடாது என சொல்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.