முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020 முதல் ஒளிபரப்பாகி வரும் மெகத் தொடர் பாக்கியலட்சுமி. தனது குடும்பத்தின் நலனுக்காக பாக்கியலட்சுமி என்கிற பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் சவால்களை பிரதானமாக இந்த தொடர் பேசி இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தது. பாக்கியலட்சுமியாக நடித்த நடிகை சுசித்ரா ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இருந்து வருகிறார். இப்படியான நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த தொடர் முடிவுக்கு வரவிருக்கிறது. பாக்கியலட்சுமி இறுதி எபிசோடின் படப்பிடிப்பை முடித்து நடிகை சுசித்ரா தனது ரசிகர்களுக்கு எமோஷனலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கி பேசியுள்ளார்
பாக்கியாவாக வாந்தேன்
எல்லாருக்கும் வணக்கம். பாக்கியலட்சுமி சீரியல் நிறைவுக்கு வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த தொடர் இத்தனை நாள் வெற்றிகரமாக தொடர்ந்ததற்கு காரணம் நீங்கள்தான். இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இனிமேல் நான் நடிக்க இருக்கும் மற்ற சீரியல்களுக்கு இதே போல் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் பாக்கியாவாக வாழ்ந்திருக்கிறேன். இந்த தருணம் ரொம்ப உணர்ச்சிகரமாக உள்ளது. பாக்கியலட்சுமியின் இறுதி எபிடோட் எப்போது வெளியாகும் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை" என அவர் இந்த வீடியோவில் எமோஷனலாக பேசியுள்ளார்.