Nanjil Vijayan: ‘விஜய் டிவி’ நாஞ்சில் விஜயன் திருமணம்.. சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துக்கள்..
விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார். குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர். இந்நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண் வேடம் தான் ஏற்று நடிப்பார்.
Just In




இதனிடையே கொரோனா ஊரடங்கு நேரத்தில் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கிய நாஞ்சில் சம்பத், அதில் யூட்யூபர் சூர்யாதேவியை பேட்டி எடுத்தார். இதில் பேசப்பட்ட விஷயங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து சூர்யா தேவிக்கும், நாஞ்சில் விஜயனுக்கு இடையே தகராறு ஏற்பட்ட இந்த விஷயம் போலீஸ் வரை சென்றது. நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு பக்கம் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' தொடரில் நடித்திருந்தார்.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் வெளியிட்டுருந்தார். அதில் பெண்ணின் முகத்தை காட்டாமல் இருந்ததை ரசிகர்கள் கேள்வியெழுப்பினர். குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற நிலையில் எளிமையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இப்படியான நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாஞ்சில் விஜயன் - மரியா திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மணப்பெண் மரியா, நண்பர்கள் மூலம் நாஞ்சில் விஜயனுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள்.. சஸ்பெண்ட் செய்த திமுக..