பாக்கியலட்சுமி சீரியல் செழியன் நடிக்கும் புது சீரியல்! எந்த டிவி? என்ன டைம்?

விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விகாஸ் அண்ணா சீரியலில் நடிக்க உள்ளார்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளாக விளங்கி வருவது ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி பிரபலம்:

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அண்ணா. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஷண்முகம் என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மீனாட்சி  பிரபலம் செந்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருகிறார். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஒரு பிரபலம்  அண்ணா சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடிகர் விகாஸ். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆவார். 

அண்ணா சீரியல்:

இவர் வரும் நாட்களில் அண்ணா சீரியலில் அறிவழகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியராகவும், ரத்னாவின் பள்ளி பருவ காதலனாகவும் நடிக்க்கிறார். இவருடைய காட்சிகள் இன்று முதல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியலட்சுமி பிரபலம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் வைகுண்டம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோசாரி, அண்ணா சீரியலில் கதாநாயகன் சண்முகத்திற்கு அப்பாவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement