விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் கணேஷ் அமிர்தாவை தேடி கண்டுபிடிப்பதற்காக சென்னைக்கு கிளம்புகிறான். கணேஷ் அம்மாவும் அப்பாவிடம் இதை சொல்ல அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். "நாங்க தான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி அமிர்தாவை தேட சொல்லி இருக்கோம்ல" என சொல்கிறார்கள். அது எதையும் காதில் வாங்காமல் "எத்தனை நாட்கள் ஆனாலும் நானே என்னுடைய குழந்தையும் அமிர்தாவையும் தேடிக் கண்டுபிடித்து கொள்கிறேன்" என சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறான்.


பாக்கியா கேன்டீனை மிகவும் சோகமாக பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அனைவரும் பாத்திரங்களை பேக் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது பாக்கியாவிடம் வேலை செய்யும் சிலர் சம்பளம் பற்றி கேட்கலாமா எனப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது செல்வி அங்கே வந்து "உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா... பணம் கொடுக்காம அக்கா எங்க ஓடிட போகுது" என்று அவர்களைத் திட்டுகிறாள்.



செல்வி பாக்கியாவிடம் சென்று "அந்த அம்மா நேரம் பார்த்து இப்படி பழி வாங்கிருச்சு" எனப் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே ராதிகா வந்து பாக்கியாவை கிண்டலாக பேசி சந்தோஷப்படுகிறாள். வீட்டுக்கு வந்த பாக்கியா மிகவும் வேதனையுடன் வேலை செய்து கொண்டு இருக்கிறாள். அபோது அங்கே அவள் கேன்டீனில் வேலை செய்யும் இரண்டு பெண்கள் வந்து பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். அதிகமாக பேசி பாக்கியாவை மனசு சங்கடப்படுத்துகிறார்கள். பாக்கியா அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள்.

அவர்கள் சென்றதும் ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டுகிறார். "இருந்தாலும் நீ ரொம்ப தான் ஆடிட்ட பாக்கியா. டைவர்ஸான மத்தவங்க மாதிரியா இருந்த? அகல கால் வைக்காத என அப்போவே சொன்னேன். இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட இப்போது உள்ளதும் போச்சு" என வார்த்தைகளால் பாக்கியாவை நோகடிக்கிறார். "அவ அப்படித்தான் பேசுவா. உனக்கு தெரியாதா. நீ எதுவும் மனசுல வைச்சுக்காத" என சொல்லி ராமமூர்த்தி பாக்கியாவை சமாதானம் செய்கிறார்.


 




கோபி ராதிகாவுக்காக மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார். ராதிகா வந்ததும் கேன்டீனில் நடந்த விஷயம் பற்றி கேட்டறிந்து சந்தோஷப்படுகிறார். "பாக்கியாவை பார்த்தால் பாவமாக இருந்ததது" என ராதிகா சொல்ல, இதுதான் உன்னோட வீக்னஸ் என்று கோபி சொல்கிறார். “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வாங்க நாம வெளிய போய் டின்னர் சாப்பிட்டு வரலாம்” என சொல்கிறார் கோபி.

பாக்கியா வீட்டில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருக்கிறாள். கேன்டீன் திறப்பு விழா பற்றி எல்லாம் நினைத்து பார்த்து சங்கடப்படுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.