விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (டிசம்பர் 27) எபிசோடில் எழிலையும் அமிர்தாவையும் எப்படியோ பேசி ஒரு வழியாக கோயிலுக்கு அனுப்பி வைத்த பாக்கியா பதட்டமாக இருக்க, அதைப் பார்த்த ராமமூர்த்தி "என்ன நடந்தது பாக்கியா? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க? ஏதாவது பிரச்சினையா" எனக் கேட்கிறார்.


"ஆமா மாமா பெரிய பிரச்சினை தான். எல்லாரும் வந்ததும் நான் எல்லாக்கிட்டேயும் சொல்லிடுறேன். இப்போ என்னை எதுவும் கேக்காதீங்க" என புலம்பிக் கொண்டே செல்கிறாள். அதைப் பார்த்த ராமமூர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை.


அமிர்தாவும் எழிலும் கோயிலுக்கு செல்ல அதை கணேஷ் பார்த்துவிடுகிறான். அவன் வருவதற்குள் அவர்களை எங்காவது அனுப்பிவிட வேண்டும் என பிளான் பண்ணி பாக்கியா அனுப்பி வைத்ததை யூகித்து விடுகிறான் கணேஷ். இன்னைக்கு உண்மையை சொல்லாமல் விடக்கூடாது என முடிவு செய்து எழில் அமிர்தாவை பின் தொடர்ந்து செல்கிறான். 


 



செழியனை அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜெனியின் அப்பா இப்படி ஜெனியை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்க வைத்தது பற்றி கோபமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி. கோபி செழியனுக்கு ஆறுதலாக பேசுகிறார். ராதிகா இந்த விஷயத்தை அவசரப்பட்டு கையாள வேண்டாம் பொறுமையாக எதிர்கொள்ளலாம் என சொல்லும் போது ராதிகாவை வார்த்தையால் தாக்குகிறார் ஈஸ்வரி.  


அப்போது அங்கே வந்த பாக்கியா அனைவரிடத்திலும் கணேஷ் பற்றின அனைத்து உண்மைகளையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கணேஷ் வீட்டுக்கு வந்து நிலா பாப்பா அப்பா என கேட்டது, ராமமூர்த்தியிடம் என்னுடைய குழந்தை போலவே நிலா பாப்பா இருக்குறா என பார்க்கில் ஒரு பையன் சொன்னது என அனைத்தையும் அவர்கள் நினைத்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். 


கணேஷ் இப்போது உயிருடன் வந்து அமிர்தாவையும் நிலாவையும் கேட்கிறான் என பாக்கியா சொன்னதும் அனைவரும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். 


 



 


கோயிலுக்குச் சென்ற எழிலுக்கு யாரோ பின்தொடர்வது போலவே இருக்கிறது. அப்படியே யோசித்துக் கொண்டே சாமி கும்பிட்டு வந்து உட்கார, நிலாவுக்கு ஏதோ பரிகாரம் செய்ய வேண்டி உள்ளது. “நான் போய் அது பற்றி விசாரித்துவிட்டு வருகிறேன்” என சொல்லி அமிர்தா தனியாக செல்ல கணேஷ் அவளை பின்தொடர்கிறான். அமிர்தா எதிரில் கணேஷ் வந்து நிற்க அதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.