Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா மாறனுடன் சென்றிருப்பாளோ என்ற சந்தேகம் கண்மணிக்குத் தோன்றிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கண்மணி கடைக்கு ஃபோன் செய்து மாறன் குறித்து விசாரிக்க, ராகவன் இன்னும் வரவில்லை என்று சொல்ல, குழப்பம் அடைகிறாள். மறுபக்கம் வீரா அண்ணா போட்டோ முன்னாடி நின்று பீல் செய்து கொண்டிருக்கிறாள், அதன் பிறகு கேக் வாங்கி வர கண்மணியும் வீட்டுக்கு வர, நான்கு பேரும் சேர்ந்து அண்ணன் போட்டோ முன்னாடி நின்று கேக் வெட்டி பாண்டியன் உயிரோடு இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பேசி பீல் செய்கின்றனர்.
மறுபக்கம் ராமசந்திரன் கண்மணி இன்னும் வரலையா என்று கேட்க, வள்ளி “அவ ஒண்ணுமே சொல்லல, இன்னும் வரல” என்று கோபப்பட, வீட்டுக்கு வந்த கண்மணி “இன்னைக்கு அண்ணனோட பிறந்த நாள், அதான் அம்மா கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தேன்” என்று சொன்னதும் சாப்பிட உட்கார்ந்த ராமசந்திரன், சாப்பிடாமல் கை கழுவி எழுந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து மாறன் குடித்து விட்டு வீட்டுக்கு வர, வள்ளி சும்மா நடிப்பதாக நினைத்து அவனை நடிச்சது போதும் என்று சொல்ல, அவன் உண்மையாகவே குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் என்று ஊதி காட்ட வள்ளி அவனை திட்டுகிறார்.
பின்னாடி நின்று இதைப் பார்த்த ராமசந்திரன் மாறனை பிடித்து சரமாரியாக அடிக்கிறார். “நீ கொன்னவனோட பிறந்த நாள் இன்னைக்கு.. அவன் இல்லாமல் அந்தக் குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுது தெரியுமா?” என்று சரமாரியாக அடித்து, என் கண்ணு முன்னாடியே நிற்காத என்று பிடித்து வெளியே தள்ளுகிறார்.
இதையெல்லாம் கண்டு ரசித்த கண்மணி, “ராகவன் பீல் பண்ணுவதைப் பார்த்து உங்க தம்பி பண்ணதும் தப்பு தானே.. இப்படி இருந்தா அவருக்கு யார் பொண்ணு தருவாங்க?” என்று ராகவனுக்கு ஆறுதல் சொல்கிறாள். குடிபோதையில் புலம்பியபடி கிடக்கும் மாறன் வீராவுக்கு போன் செய்ய, அவள் மாறன் நம்பர் எனத் தெரிந்ததும் போனை எடுக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Siragadikka Aasai Serial July 9: யார் அந்தக் களவாணி? பிளேட்டை திருப்பி போட்டு எஸ்கேப்பாகும் விஜயா... சிறகடிக்க ஆசையில் இன்று
Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?