தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Continues below advertisement

சன் மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக புத்தம்புதிய சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தொலைக்காட்சி.... சமீபத்தில் அயலி என்ற சீரியலை ஒளிபரப்ப துவங்கியது. இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'வாரிசு' படத்தின் டைட்டிலுடன் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியல் வரும் ஜூன் 30-ம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வாரிசு சீரியல் ஒளிபரப்பாகி வருவதால், ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே, சீரியல் இனி 3 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஹீரோவின் பாட்டி தனது திறமையாலும் தியாகத்தாலும் கட்டி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை தனது பேரன் அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கு அடுத்ததாக சரியாக வழிநடத்திக் கொண்டு செல்லப் போவது யார் என்று தெரியாமல் தவிக்கிறார்.

இந்த சமயத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாயகி தமிழுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக அவரது அப்பா தலைமறைவாகி விட இந்த கல்யாணம் நின்று போகின்றது. இதனால் தமிழ் தனது குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் தாங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இப்படியான சூழலில் ஹீரோ சிபி உடன் தமிழ் எப்படி ஜோடி சேருகிறாள்? பாட்டி சாம்ராஜ்யத்தை வழி நடத்த வந்த தமிழ் குடும்பத்தையும் ஒன்றிணைத்து செய்வாளா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க இதே ஜூன் 30 தான் தேதியில் இருந்து இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மீண்டும் 10:00 மணி வரை ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.