ரசிகர்கள் எதிர்பாரா வண்ணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், விவாத நிகழ்ச்சிகளுக்கு என்று சிறுவர் முதல் பெரியவர் வரை தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அனைத்து சீரியல்களும் ஒரே கதைக்களத்தை அடிப்படையாக கொண்டாலும் டிஆர்பியை தக்க வைக்க சுவாரஸ்யமாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட குழுவினர் மெனக்கெடுகின்றனர்.  


முன்பெல்லாம் சின்னத்திரையில் சீரியல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகி வந்தது. தொடர்ந்து டிஆர்பி மற்றும் ரசிகர்களின் வரவேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் தொடங்கி இரவு 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பழைய கால சீரியல்களும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது ஒளிபரப்பு நேரம் தற்போது வாரத்தின் 7 நாட்களாக விரிவடைய தொடங்கியுள்ளது. 


இதற்கான முன்னெடுப்பை சன் டிவி  எடுத்துள்ள நிலையில் முதல் சீரியலாக கடந்த இரண்டு மாத காலமாக எதிர்நீச்சல் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் நம்பர் 1 ஆக இருப்பதே காரணம் என சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல்  மேலும் 2 சீரியல்கள் இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. 






ஒன்று, மிஸ்டர். மனைவி சீரியல். இது வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 3 ஆண்டுகளாக சன் டிவியில் வெற்றிநடைப் போட்டு வரும்  அன்பே வா சீரியலும் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


இப்படியான நிலையில் ரிஷி மற்றும் ஆல்யா மானசா ஆகியோரின் முன்னணி நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “இனியா” சீரியலும் ஞாயிற்றுக்கிழமை பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி இந்த சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வளர்ச்சிக்காகவும் மற்றும் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் இருந்து வரும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.




மேலும் படிக்க: ODI WC 2023 India Team: உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம் & பலவீனம் என்ன? - ஓர் அலசல்