சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த வாரத்தில் கொன்றவை தலைமையிலான ஸ்பெஷல் போலீஸ் டீம் தர்ஷினியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். வீரசங்கிலியின் அடியாள் ஒருவரின் ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி விடுகிறான். அவரின் நிலை என்ன என்பது இதுவரையில் தெரியவே இல்லை.
குணசேகரன் இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைகிறார்.தர்ஷினி 'அப்பா காப்பாத்துங்க' என அலறுவதை குணசேகரனை தான் சொல்கிறாள் என அனைவரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ஈஸ்வரி தர்ஷினியை நெருங்கக்கூடாது என நீதிபதியிடம் உத்தரவு வாங்கி விடுகிறார் குணசேகரன். ஈஸ்வரி தர்ஷினியை பார்ப்பதற்காக வீட்டுக்குள் வர அவளை அவமானப்படுத்தி கழுத்தை பிடித்து விரட்டுகிறார் குணசேகரன். தர்ஷினி ஜீவானந்தத்தை தான் அப்பா என அலைகிறாள் என்பதை பற்றி ஈஸ்வரி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் கடந்த வாரத்தில் எதிர்நீச்சல் கதைக்களம். அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரியை வீட்டுக்குள் சேர்க்காமல் குணசேகரன் பிரச்சினை செய்வதால் அனைவரும் வாசலில் நின்று இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது "தர்ஷினிக்கு இவரைப் பற்றின ஏதோ ஒரு உண்மை தெரிஞ்சு இருக்கு. எல்லா விஷயத்தை அவ சொல்லிவிடுவாளோ என்கிற பயம் இவருக்கு" என ஜனனி சொல்ல அனைவரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
குணசேகரன் பற்றின உண்மையை தர்ஷினி உடைப்பாளா? ஜீவானந்தம் நிலை என்ன? உண்மையான குற்றவாளி யார் என்பது வெளிச்சத்துக்கு வருமா? ஈஸ்வரி மீது இருக்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா? இப்படி பல ட்விஸ்ட்களுடன் எதிர்நீச்சல் எபிசோட் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.