சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 5) எபிசோடில் கதிர் ஆதிரையிடம் மன்னிப்பு கேட்கிறான். "அண்ணண் சொன்னதை எல்லாம் நம்பி பொம்பளைகளை இப்படித்தான் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளும் வந்துவிட்டது. இனி உனக்கு என்ன விருப்பமோ அதையே நீ செய். உனக்கு சப்போர்ட்டாக நாங்கள் எல்லோரும் இருப்போம்" என்கிறான் கதிர்.



சக்தி கதிரை அழைத்து "என்னுடைய அண்ணன் எனக்கு கிடைத்துவிட்டான். பெரிய பலமே வந்தது போல இருக்கிறது" என்கிறான். "தர்ஷினியை இன்னும் தேடாமல் அப்படியே இருக்கிறோம். ஏதாவது தகவல் தெரிந்ததா?" என ஞானம் கேட்க, "அவர்கள் தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார்களாம். அவர்களுக்கு உதவியாக ஜீவானந்தம் இருக்கிறார். ஏதோ காட்டுப் பகுதிக்கு தேடிப் போய் இருக்கிறார்கள். நிச்சயம் தர்ஷினியை கண்டுபிடித்து விடுவார்கள்" என சக்தி சொல்கிறான்.


 





ஈஸ்வரியும் மற்ற பெண்களும், தர்ஷினியை அடைத்து வைத்து இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார்கள். ஜீவானந்தம் சொன்னதை ஞாபகப்படுத்தி முன்னேறி செல்கிறார்கள். மறுபக்கம் தர்ஷினி தனக்கு கோச் சொல்லி கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறாள். இது வெறும் கேம் கிடையாது, இது உங்களின் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என அவர் சொன்னதை நினைத்துப் பார்த்து மனதை ஒருநிலை படுத்துகிறாள். அங்கிருந்து எப்படி தப்பித்து செல்வது என யோசித்துக் கொண்டு இருக்கிறாள்.

“என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என சக்தி சொல்ல, அனைவரும் சேர்ந்து அவனை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். வீட்டில் விசாலாட்சி அம்மா சக்தி இப்படி அடிபட்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஜான்சி ராணி நக்கலாக பேச கதிர் அவளை திட்டுகிறான்.


ஆதிரை வீட்டுக்குள் வருவதை பார்த்து விசாலாட்சி அம்மா அவளை விரட்டுகிறார். "இங்க நான் ஒன்னும் ஒட்டிக்கிறதுக்காக வரவில்லை. என்னோட அண்ணன் உடம்பு முடியாமல் இருக்கிறான். அவனைப் பார்த்துக் கொள்ள தான் வந்து இருக்கிறேன்" என சொல்ல விசாலாட்சி அம்மா அவளை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.


“எங்களை வளர்த்தவர் என்பதால் அவருக்கு எங்களுடைய வாழ்க்கையை முடிவு பண்ண என்ன உரிமை இருக்கு " என குணசேகரனை பற்றி சொல்கிறாள் ஆதிரை. இந்த வீட்டில் யாருக்கும் இடம் இல்லை என விசாலாட்சி அம்மா சொல்ல "அப்பத்தா எழுதி வைத்த உரிமை இருக்கிறது. அவருக்கு சொத்து சேர்க்க இவங்க எல்லாரும் உழைச்சு இருக்காங்க. அவங்க எதுக்கு இந்த வீட்டை விட்டு போகணும்" என ஆதிரை பாயிண்ட் பாயிண்டாக பேசுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரன் வீட்டுக்கு வந்ததும் ஆதிரை அவரிடம் "உனக்கு தர்ஷினியை தேடுவதில் விருப்பமில்லை. அவ காணாம போனதை ஒரு காரணமா வைச்சு அண்ணியை அசிங்கப்படுத்தனும். அதுக்காக தான் நீ ஒவ்வொன்னும் பண்ணிக்கிட்டு இருக்க" என மிகவும் துணிச்சலாக பேச அவளை பார்த்து முறைக்கிறார் குணசேகரன்.


 



"இனிமே ஒட்டாது...மொத்தமா அறுந்து போச்சு. டேய் போங்கடா வெளியே" என அனைவரையும் விரட்டுகிறார் குணசேகரன். "நாங்க ஏன் வெளியே போகணும்?" என சக்தி சொல்ல கதிர், ஞானம் என அனைவரும் அவரை முறைத்து பார்க்கிறார்கள்.


 




இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திடம், தர்ஷினி பற்றி விசாரிக்கிறார். அப்போது ஜீவானந்தம் "வாழ்க்கையே வெறுத்து போய் என்கிட்டே வந்து பேசுனப்ப, சரி நீ போயிடுமான்னு நான் தான் சொல்லி அனுப்பி வச்சேன்" என இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 


 



மேலும் பார்க்க : Siragadikka Aasai: மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து... கடுப்பான விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!