சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்.27) எபிசோடில் நந்தினி தாராவின் பள்ளி ஆசிரியையிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கிறாள். ஸ்கூல் பீஸ் கட்டாததால் தாராவை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் என சொல்லிவிட்டார்கள் என்பதை கதிரிடம் சொல்கிறாள்.


அதைக் கேட்டு ஞானம், மாமியார் கொடுத்த பணத்தில் இருந்து கொஞ்ச பணத்தை எடுத்து வந்து பீஸ் கட்ட கதிரிடம் கொடுக்கிறான். ஆனால் நந்தினி அதை வாங்க வேண்டாம் என சொல்லிவிடுகிறாள். “ஏற்கெனவே ஒரு முறை கையேந்தி இருந்தது போதும், இனிமேலாவது சுய கௌரவத்துடன் இருக்க வேண்டும். கதிர் தான் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்” என்கிறாள். ஞானம் எவ்வளவு சொல்லியும் நந்தினி கேட்கவில்லை. கதிரும், “நந்தினி சொல்வது தான் சரி. இனிமேலாவது நான் பொறுப்புள்ளவனாக மாற வேண்டும்” என சொல்கிறான்.


 




அந்த நேரத்தில் சக்தி வந்து ஸ்பெஷல் அதிகாரி பற்றியும் ஜனனி அவர்களுடன் சென்றது பற்றியும் சொல்கிறான். நான் யாருக்கும் உதவியாக இருக்க முடியவில்லை என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறான் ஞானம். "தர்ஷினி கூடிய சீக்கிரம் கிடைச்சுடுவா. அவளை நினைச்சுகிட்டு மற்ற பிள்ளைகளை நாம பார்க்காம இருக்கக்கூடாது. அது ரொம்ப தப்பு. தயவு செய்து எல்லாரும் அவங்களோட வேலையைப் பாருங்க. தர்ஷினியும் அண்ணியும் இந்த வீட்டுக்கு வரும் போது அவங்களுக்கு நல்ல ஒரு சூழலை கொடுக்கணும்" என சக்தி சொல்கிறான்.

ஸ்பெஷல் அதிகாரி ஜீவானந்தம் தப்பிப்பது பற்றி ஜனனியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். "நாம இப்ப போகும் ட்ராக் சரி என்றால் இன்னும் 40 மணி நேரத்தில் தர்ஷினியை கண்டு பிடித்து விடுவோம். அதுக்கு ஜீவானந்தம் தடையாக இருக்க கூடாது அது தான் என்னோட கவைலேயே. ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் மீது பழி போட என்ன காரணம். குணசேகரன் சொல்றதும் அந்த வீடியோ ஆதாரமும் ஒரே மாதிரி தான் இருக்கு. அப்ப யார் தர்ஷினியை கடத்தி வைச்சு இருக்காங்க. அவங்க மோட்டிவ் என்ன, எதுக்காக அவளை இப்படி கொடுமைப்படுத்துறாங்க?" எனக் கேட்கிறார்.

தர்ஷன், தர்ஷினி காணாமல் போனதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு அழுகிறான். நந்தினி பேசியதை நினைத்து ஞானம் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறான். கதிரிடம் சென்று அதை சொன்னதும் அவர்கள் அனைவரும் ஞானத்திடம் சென்று பேசுகிறார்கள். தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரன் சென்று கரிகாலனையும், ஜான்சி ராணியையும் சந்திக்கிறார். அவர்களை தன்னுடன் வர சொல்லி அழைக்கிறார். ஜான்சி ராணி நக்கலாகக் கேட்க "கிளம்புங்கன்னு சொல்லும்போது கேள்வி கேட்காம கிளம்பிடனும். உங்களுக்கு என்ன செய்யணுமா அதை நான் செஞ்சுடுறேன்" என்கிறார்.




வருத்தப்பட்டு பேசும் ஞானத்தை சமாதானம் செய்கிறான் கதிர். "அவ வேண்டாம் என சொன்னது தான் உன்னோட பிரச்சினை. அது தானே?" என சொல்ல "சத்தியமா நான் உங்களை எதுவும் தப்பா பேசலை மாமா" என நந்தினி சொல்ல "கொஞ்சம் நேரம் சும்மா இரு" என அவளை அடக்கி விடுகிறான் கதிர்.

குணசேகரன் வீர சங்கிலியிடம் போன் செய்து பேசுகிறார். "என்னோட பொண்ணை ஒழுங்கா பாத்துக்கோ. நான் வரப்பப்ப உனக்கு போன் பண்ணறேன்" என சொல்கிறார். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.


 




தர்ஷினியை ஆள் வைத்து கடத்தியது குணசேகரன் தான் என்பது வெட்டவெளிக்கு வந்துவிட்டது. இனியாவது அவர் போலீசில் சிக்கி தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.