சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 12) எபிசோடில் ஈஸ்வரி, நந்தினி,ஜனனி மற்றும் ரேணுகா போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக அழைத்து வந்து இருக்கிறார்கள். ஒரு பெண் அதிகாரி நந்தினியையும், ரேணுகாவையும் விசாரணை செய்ய உள்ளே அழைக்கிறார். அதிர்ச்சியுடன் உள்ளே சென்றவர்களை கடுமையாக அடித்து தர்ஷினியை பற்றி விசாரிக்கிறார்கள்.  






பெண்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது பற்றி குணசேகரன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கதிரும் சக்தியும் அவர்களை பார்க்க அண்ணன் குணசேகரனை எதிர்த்து உடனே கிளம்பி போலீஸ் ஸ்டேஷன்  வருகிறார்கள். அவர்களை பார்க்க காவல்காரர்கள் அனுமதிக்காததால் அவர்களை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என விடாப்பிடியாக இருக்க வேறு வழியில்லாமல் நந்தினியை மட்டும் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

தர்ஷினி எப்படியோ ரவுடிகளிடம் இருந்து தப்பித்து சென்று விடுகிறாள். அதனால் கடுப்பான ரவுடிகள் ஒரு சின்ன ஸ்கூல் பொண்ணு உங்களை எல்லாம் அடிச்சு போட்டுட்டு எஸ்கேப் ஆகி இருக்கு என சொல்லி அடியாட்களை திட்டி கொண்டு இருக்கிறான்.

மறுபக்கம் பலத்த காயங்களுடன் வெளியில் வந்த நந்தினியை பார்க்க காத்திருந்த கதிர், ஞானம், சக்தி மற்றும் தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார்கள். நடக்கமுடியாமல் வந்த நந்தினியை கைத்தாங்கலாக அழைத்து வருகிறான் கதிர். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நான்கு பெண்களுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த சாருபாலாவின் உதவியை நாடுகிறாள் ஆதிரை. கதிர் அவரிடம் சென்று கண்கலங்கிய படி "உங்க வீட்ல நடந்த பல கலகத்துக்கு நான் தான் காரணம்" என சொல்லி மன்னிப்பு கேட்கிறான். நடந்த அனைத்தையும் பற்றி சாறு பாலாவிடம் சொல்லி பெண்கள் அனைவரையும் வெளியில் எடுக்க கெஞ்சி கேட்கிறான்.


 




ஸ்டேஷன் உள்ளே இருந்த நந்தினி "கூட இருந்தப்ப வெறுப்பை மட்டும் கொட்டிட்டு இப்போ எதுக்கு அக்கா பாசத்தை காட்டுறாங்க" என சொல்லி அழுகிறாள். அவள் பேசுவதை கேட்டு மற்றவர்களும் அழுகிறார்கள். ஈஸ்வரி தர்ஷினியை நினைத்து வேதனை படுகிறாள்.

வீட்டில் இருக்கும் குணசேகரன் "நீங்க நாளைக்கு இந்த வீட்டுக்கு வரும் போது ஒரு பெரிய விஷயத்தை சொல்ல போறேன்" என சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.  


 





போலீஸ் ஸ்டேஷனில் நான்கு பெண்களும் அவதி படுகிறார்கள் என்றால் தர்ஷினியின் நிலை என்ன என்பது ஒரே சஸ்பென்சாகவே இருக்கிறது. குணசேகரன் வைக்க போகும் பெரிய வெடி குண்டு என்னவாக இருக்கும். பரபரப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்.