சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான லாரன்ஸ் என்ற நபர் மறைந்து விட்டதாக வெளியாகி உள்ள தகவல் இணையத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதுகுறித்து எதுவும் யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. குடும்ப பிரச்சினை நம்ப வைத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு இருதரப்பு நபர்களையும் வைத்து பேசி தீர்வு காணும் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 


முதலில் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சில காலம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கியிருந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிகள் எல்லாம் அல்டிமேட் ரகமாக இருக்கும். குறிப்பாக அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. 


இப்படியான நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வீடியோ வலம் வருவதை நாம் அனைவரும் பார்த்து இருக்கலாம். அதில் பேசும் நபர் எதிரில் இருக்கும் நபர் பேசுவதை வைத்து தொகுப்பாளரிடம், “மேடம் இது ஆக்சன்”,  “மேடம் மேடம்” என சொல்வதை கேட்டிருப்போம். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இத்தனை ஆண்டுகள் கழித்து வைரலானது. 






இதனிடையே லாரன்ஸ் இறந்து விட்டதாகவும், பலரும் அவரை கொரோனாவுக்கு பிறகு பார்க்கவில்லை எனவும் தெரிவித்ததாக தகவல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து யூட்யூப் சேனல்களும், இணையவாசிகளும் லாரன்ஸை தேடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படியான நிலையில் லாரன்ஸின் உண்மையான பெயர் விருமாண்டி என தெரிய வந்துள்ளது. பிற்காலத்தில் அவர் லாரன்ஸ் என பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 


அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தான் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகும் கூட லாரன்ஸ் இங்கே வேலை செய்துள்ளார். நன்றாக சம்பாதித்து சாப்பிட்டு வந்த அவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்துள்ளார். கொரோனா தொற்றுக்குப் பிறகு தான் லாரன்ஸை யாரும் பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்கள். 


உண்மையில் லாரன்ஸ் இருக்கிறாரா, இல்லையா என்பது அவரோ அல்லது குடும்பத்தினரோ சொன்னால் மட்டுமே தெரியும் என்பதால் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


லாரன்ஸ் வாழ்க்கையில் நடந்தது என்ன?


2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லாரன்ஸ் கலந்து கொண்டார். அதில் பேசும் அவர், ‘முன்னாடி தான் பொருட்களை கொள்முதல் செய்யும் வேலை பார்த்து வந்த அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் தற்காலிகமாக வேலைப் பார்த்து வந்துள்ளார். அவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவில் பகுதியாகும். 


பாடியில் உள்ள பெண் ஒருவரை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள். என் மனைவியின் அக்காவுடன் சகஜமாக பேசிய என்னை, நான் அவருடன் தொடர்பில் இருப்பதாக என் மனைவி குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் என் மனைவியை நான் பிரிந்து விட்டேன். இதுதொடர்பாக பஞ்சாயத்து பேச அந்நிகழ்ச்சிக்கு வந்திருப்பார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.