'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியலின் இன்றைய (மே 16) எபிசோடில் முத்து கல்யாண நாளை மறந்ததால் மீனா கோபித்து கொள்ள முத்து சென்று சமாதான படுத்துகிறான். இருவரும் சேர்ந்து திருமணத்துக்கு முன்னர் எங்கெல்லாம் மோதலுடன் சந்தித்து கொண்டார்கள் என்பது பற்றி சந்தோஷமாக பேசி கொள்கிறார்கள்.


மீனா அம்மாவை அவமானப்படுத்திய விஜயா:

மீனாவின் அம்மா முதல் கல்யாண நாளுக்காக சீருடன் வீட்டுக்கு வர அவரை விஜயா என்ன நகையுடனா வந்து இருக்கிறீர்கள் என அவமானப்படுத்தி பேசுகிறார். முத்துவுக்கும் மீனாவுக்கும்  துணி பழங்கள் எடுத்து வந்து கொடுக்க அதை பார்த்து கேவலமாக பேசுகிறாள் விஜயா. எதையும் காட்டிக்கொள்ளாமல் மீனாவின் அம்மா ரோகிணியும் மனோஜும் ஷோரூம் திறக்க போவது பற்றியும் ரோகிணி அப்பா ஜெயிலில் இருப்பது பற்றியும் விசாரித்து அவர் சீக்கிரம் வெளியில் வருவதற்காக பரிகாரம் சொல்கிறார்.


ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட ரோகிணியும் விஜயாவும் மீனா அம்மா கிளம்பியதும் பயங்கரமாக திட்டுகிறார்கள். "வீட்டில் நடக்கும் விஷயங்களை ஏன் அம்மா வீட்டில் சொல்ற?" என விஜயா கடுமையாக கண்டிக்கிறாள்.


 




மீனா முத்துவை பார்க்க ரூமுக்கு சென்றதும் அவள் ஏதோ போட்டு கொடுக்கத்தான் போகிறாள் என விஜயா ரூமுக்கு வெளியில் நின்று ஒட்டு கேட்கிறாள். மீனா முத்துவிடம் நாளை அவளுடைய வீட்டுக்கு போவது பற்றி பேசவும் முத்து தயங்குகிறான். மீனா தன்னுடைய தம்பியை மன்னிக்க சொல்லி முத்துவிடம் கேட்கிறாள். வெளியில் வந்த மீனா விஜயா ஒட்டுக்கேட்டு கொண்டு இருப்பதை பார்த்து "நான் அவரிடம் எதையும் போட்டு கொடுக்க மாட்டேன். இந்த குடும்பத்தோட அமைதி தான் எனக்கு முக்கியம். நீங்க பயப்பட வேண்டாம்" என மீனா சரியான பதிலடி கொடுக்கிறாள்.

அடுத்த நாள் காலை முத்து அண்ணாமலையும் விஜயாவையும் அழைத்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக கூப்பிடுகிறான். அந்த நேரத்தில் பாட்டி வீட்டுக்கு வருகிறார். அவரை பார்த்து முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகிறார்கள். பாட்டி முத்து மீனாவின் கல்யாண நாள் பற்றி தெரிந்து தான் வந்திருப்பதாக சொல்கிறார். மனோஜ் ரோகிணியிடம் என்ன செய்கிறார்கள் என விசாரிக்கிறார் பாட்டி. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.