விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியலின் இன்றைய (மே 14) எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.



வீட்டில் அனைவரையும் மீனா சாப்பிட அழைக்க மனோஜ் ரோகிணி சாப்பிட வரவில்லை என்பதால் விஜயா மீனாவை திட்டி மறுபடியும் போய் கூப்பிட சொல்கிறாள். மீனாவை முத்து நிறுத்தி "பசிச்சா அவங்களாகவே வரட்டும்" என சொல்லி அவளை தடுத்துவிடுகிறான்.

அனைவரும் ஷோரூமுக்கு என்ன பெயர் வைப்பது பற்றி பேசுகிறார்கள். மீனா பாட்டியின் பெயரை வைக்க சொல்லி கருத்து சொல்ல ரோகினி நாங்கள் பெயரை முடிவு செய்து கொள்கிறோம் என மீனாவை உதாசினப்படுத்தி விடுகிறாள். விஜயாவுக்கு அவளுடைய பெயரை வைப்பது பற்றி ரோகிணியும் மனோஜும் யோசிக்கவில்லை என்றவுடன் முகமே மாறிவிடுகிறது. அதை முத்து கவனித்து விடுகிறான்.


 





ரோகிணியும் மனோஜும் என்ன பெயர் வைக்கலாம் என ரூமில் பேசி கொண்டு இருக்கிறார்கள். ரோகிணி விஜயா பெயரை வைக்கலாம் என சொல்ல மனோஜ் "அம்மா பெயர் வேண்டாம். அவங்க ராசியில்லை. ஏற்கனவே உன்னோட பார்லர், முத்து ஆரம்பிச்ச பூக்கடை எல்லாமே  அம்மா பெயரில் தான் இருந்தது. ஆனால் அது பாதியிலேயே போய்விட்டது. அதனால் அம்மா பெயர் வேண்டாம்" என சொல்கிறான். இதை முத்து வெளியில் இருந்து கேட்டு போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறான்.

மனோஜ் ரூமுக்குள் சென்று "நீ உன்னுடைய ஷோரூமுக்கு அம்மா பெயரை தான் வைக்க வேண்டும். அம்மா உன் மேல முழு பாசத்தையும் வைச்சு இருக்காங்க. அவங்களை ராசியில்லை என எப்படி உன்னால் சொல்லமுடியுது. பார்லர் கைமாறியதற்கு உன்னோட பொண்டாட்டி தான் காரணம். எங்களோட பூ கடை காலியானதற்கு சில வயிற்று எரிச்சல் கொண்டவர்கள் காரணம். அம்மா பெயரை தான் நீ உன்னோட கடைக்கு வைக்கணும். வேற எந்த பெயரையும் நான் வைக்க விடமாட்டேன். இந்த ஆடியோவை அம்மாகிட்ட போட்டு காட்டி முடிவு செய்து கொள்ளலாம் வா " என மனோஜை முத்து அழைக்க மனோஜ் தடுமாறுகிறான். விஜயா பெயரை தான் வைக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை மிரட்டிவிட்டு முத்து வந்து விடுகிறான்.

அவர்கள் பேசியதை மீனா கேட்டுவிடுகிறாள். முத்துவிடம் "என்னால் உங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. நீங்க உங்க அம்மா மேல  இவ்வளவு பாசம் வைச்சு இருக்கீங்க. ஆனா உங்க அம்மா எல்லா இடத்திலேயும் உங்களை அசிங்கப்படுத்திக்கொண்டே இருக்காங்க. உங்களை போல ஒரு அம்மா பையனை நான் பார்த்தது கிடையாது. உங்க இரெண்டு பேருக்கும் இடையில என்ன தான் பிரச்சினை இருக்கு என எனக்கு புரியவில்லை. அப்படி என்ன பிரச்சினை" என மீனா முத்துவிடன் கேட்கிறான்.


 





முத்து கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஏதோ சொல்ல வந்து பிறகு அப்படியே நிறுத்திவிட்டு அதை பற்றி பேச வேண்டும் அப்படி எதுவும் இல்லை என முத்து மறுத்துவிடுகிறான். ரவி ஹோட்டலில் ஏதோ பர்த்டே பார்ட்டி இருந்ததால் வீட்டுக்கு லேட்டாக வருகிறான். ரூமுக்கு போய் பார்த்தால் ஸ்ருதி ரவியின் லுங்கியை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறாள். ரவி அவளை ட்ரெஸ்ஸை மாற்றி கொள்ள சொல்ல ஸ்ருதி உனக்கு என் மேல லவ் இருந்தா நீ என்னோட ட்ரெஸ்ஸை போட்டுக்க வேண்டும் என சொல்லி நைட்டி ஒன்றை கொடுத்து போட்டுக்கொள்ள சொல்கிறாள். ரவியும் நைட்டி மாற்றிக்கொள்ள ஸ்ருதி ரவியிடம் அதே ட்ரெஸ்ஸில் கிச்சனுக்கு போய் ஒரு டீ போட்டு எடுத்து வர சொல்கிறாள்.

ரவியும் ஸ்ருதிக்காக டீ போட கிச்சனுக்கு போக விஜயா யாரோ திருடி வந்து இருப்பதாக நினைத்து அனைவரையும் கத்தி கூச்சலிட்டு எழுப்புகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) கதைக்களம்.