ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வாக்கிங் கிளம்பிய மகா மற்றும் அர்ச்சனாவை முக்காடு போட்டுட்டு போக சொல்லி சீதா கலாய்த்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மகாவும் அர்ச்சனாவும் முக்காடு போட்டு கொண்டு வெளியே வர சுபாஷை அறைந்த பக்கத்துக்கு வீட்டார் இவர்களை தடுத்து நிறுத்தி “யார் இவங்கனு தெரியுதா? கஞ்சா கடத்தியவங்க மனைவி” என்று சொல்லி கலாய்க்க, இவர்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகின்றனர். மகா “நான் யாருனு தெரியுமா” என டயலாக் பேச, “உங்க கம்பெனி கஞ்சா கடத்துற கம்பெனி தானா” என அவமானப்படுத்துகிறார்கள். இதனால் இருவரும் அவர்களை கல் எடுத்து அடித்து ஓட விடுகின்றனர்.
ஜெயிலுக்கு சுபாஷ் மற்றும் சேது எந்த வேலையையும் செய்யாமல் உக்கார்ந்திருக்க, ஜெயிலர் “கஞ்சா கேஸ்ல உள்ள வந்த ரெண்டு பேரும் வாங்க” என்று சொல்லி அவமானப்படுத்தி அவர்களை பாத்ரூம் கழுவ சொல்ல வேறு வழியின்றி இருவரும் பாத்ரூம் கழுவுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மகாவும் அர்ச்சனாவும் அவமானப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே காரில் வரும் சத்யனும் இவர்களை வெறுப்பேற்றி ஆபிஸ்ல கேமரா வச்சி “இந்த புல் ஆப்ரேஷனையும் செய்தது நான் தான்” என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மகா கோபத்துடன் வீட்டிற்கு வந்து துரை மற்றும் சீதாவிடம் “அந்த சத்யனை கூட வச்சிட்டு தான் இதெல்லாம் பண்ணீங்களா” என்று கோபப்படுகிறாள்.
மீரா உங்க பேச்சை கேட்டு தலையாட்டுட்டு இருந்த என் ரெண்டு அண்ணன்களும் இப்போ ஜெயிலில் இருக்காங்க என்று எதிர்த்து பேச “ஆமாம், எல்லாத்தையும் பண்ணது நான் தான்.. உனக்கு கல்யாணம் ஆகாததற்கு கூட நான் தான் காரணம், உன்னால என்ன பண்ண முடியும்” எனக் கேட்க சீதா சத்யனுக்கும் மீராவுக்கும் அடுத்து கல்யாணம் தான் என சவால் விடுகிறாள்.
அர்ச்சனா “துரையை வெளியே அனுப்புங்க” என்று சொல்ல, அவன், “மகா என்னை அப்படி வெளியே அனுப்ப மாட்டா” என்று சொல்ல மகாவும் அப்படியே டாப்பிக்கை மாற்ற அர்ச்சனாவுக்கு சந்தேகம் அதிகமாகிறது. இதனைத் தொடர்ந்து மகா சீதாவை அடிக்க பாய அந்த சமயம் பார்த்து மதுமிதா வர மகா அப்படியே ஆப் ஆகிறாள்.
பிறகு மீரா “மதுமிதா வந்ததால் நீ தப்பிச்ச” என்று சொல்ல சீதா “தப்பிச்சது நான் இல்ல, மகா தான்” என்று சொல்கிறாள். இப்படியான பரபர சூழலில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.