தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் ஏற்பாட்டின் படி மகளிர் குழுவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, வந்தவர்கள் எல்லாரும் மஞ்சள் புடவையில் வர, சீதாவும் மஞ்சள் கலர் புடவையில் உட்கார்ந்து வீட்டில் பூஜை செய்ய எல்லாரும் எதுவும் புரியாமல் நிற்கின்றனர், பிறகு பஜனை பாட நான்சி “இது என்ன பஜனை மடமா?” என்று கோபப்படுகிறாள். அதே சமயம் சீதாவின் நடவடிக்கையால் நான்சிக்கு ஏதோ சந்தேகமும் எழுகிறது. 


இதனையடுத்து சீதா எல்லாரையும் அழைத்து கொண்டு கோயிலுக்கு கிளம்ப, நான்சி தடுத்து நிறுத்தி “அதான் இங்கயே எல்லா பூஜையும் பண்ணிட்டியே, அப்புறம் கோயிலுக்கு எதுக்கு?” என்று கேட்க, “நாங்க போயிட்டு வருவோம்” என்று சொல்லி கிளம்பி செல்கிறாள். இதனால் நான்சியின் சந்தேகம் அதிகமாகிறது. 


வெளியே வந்த சீதா எல்லாரையும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு அழைத்து வந்து சுத்தம் செய்து வேலையைத் தொடங்க தயாராக, சேது அங்கு வருகிறார். சீதாவைப் பாராட்டி “நமக்கு லாபம் கூட வேண்டாம், லாபத்தை இவர்களுக்கே கொடுத்திடலாம். நாம இந்த ஆர்டரை முடித்து கொடுத்தால் மட்டும் போதும்” என்று முடிவெடுக்கிறாள். 


இதனைத் தொடர்ந்து நான்சி அர்ச்சனா மற்றும் சுபாஷை கூப்பிட்டு “எனக்கு என்னமோ அவங்க கோயிலுக்கு போற மாதிரி தெரியல, ஏதோ பிளான் போட்டு இருக்கா” என்று சுபாஷை தேடச் சொல்லி அனுப்பி வைக்கிறாள். மறுபக்கம் சீதா மகளிர் குழுவினரை வைத்து வேலைகளை செய்து கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகிறது. 


ஜெனரேட்டர், பவர் பேக்கப் எதுவும் இல்லாத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இவர்கள் திகைத்து நிற்கின்றனர், இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் பரபரப்புடன் நிறைவடைகிறது.