தியேட்டர்களில் எந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதைப் போலவே, ஒவ்வொரு வாரமும் எந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் ஆகிறது என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ,இந்த வாரம் நவம்பர் 18 ம் தேதி, ஓடிடி.,யில் செம்ம வேட்டை காத்திருக்கிறது. இதோ அந்த பட்டியல்...


சர்தார்:






தீபாவளி வெளியீடாக தமிழில் வெளியான சர்தார் திரைப்படம், அந்த ரேஸில் முதன்மை பெற்றது. தியேட்டரில் நல்ல அறுவடை செய்த சர்தார், இந்த வாரம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்த இத்திரைப்படம், இந்த வாரம் வெளியாக உள்ளது. 


காட்ஃபாதர்:






 


மலையாளத்தில் சக்கை போடு போட்ட லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் காட்ஃபாதர். சிரஞ்சீவி, சல்மான், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் தியேட்டரில் சக்கை போடு போட்ட காட் ஃபாதர் திரைப்படம், தற்போது தனது அறுவடையை முடித்துக் கொண்டு, ஓடிடி தளத்திற்கு வருகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் வரும் இத்திரைப்பட்தை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 


வொண்டர் விமன்:






ஒரே ஒரு விளம்பரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம். கர்ப்பிணிகள் பற்றிய வாழ்வியலை கூறும் படம் என விளம்பரங்கள் தெரிவிக்கிறது. கடும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தில் நதியா, நித்யா மேனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஞ்சலி மேனன் இயக்கும் இத்திரைப்படம், தமிழ், மலையாளர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தயாராகி உள்ளது. நேரடியாக ஓடிடி.,யில் களமிறங்கும் இத்திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாக உள்ளது. 


அனல் மேலே பனித்துளி:






 


வெற்றிமாறன்-ஆன்ட்ரியா கூட்டணி என்கிற பெயரில் வெளியாகவிருக்கும் திரைப்படம், வெற்றி மாறன் தயாரிப்பில் கைசர் ஆனந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படமும், பெண்ணியம் பேசும் படமாக இருக்கும் என தெரிகிறது. ஆன்ட்ரியா நடித்திருக்கும் இத்திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பெரிய எதிர்ப்புகளை கொண்ட படங்களில், இத்திரைப்படமும் ஒன்று. 


1899:






வெளிநாட்டு படங்களை அதிகம் வெளியிடும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில், இந்த வாரம் 1899 என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது, ஆங்கிலம் உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ், ஹாரர், வரலாற்று நிகழ்வுகளை கொண்ட ஒரு தொடர் ஆகும். இதன் முதல் எபிசோட் வெளியான பின், அதை தொடர்ந்து பல எபிசோடுகள் வெளியாகும் என தெரிகிறது. ஹாலிவுட் பிரியர்களுக்கு இது நல்ல விருந்தாக இருக்கும். 


ஆஹா நா பெல்லன்ட:






முழு நீள தெலுங்கு வெப்சீரிஸ் இது. சஞ்சீவி ரெட்டி இயக்கத்தில் ராஜ் தரூர், ஷிவானி ராஜசேகர், ஹர்ஷா வர்தன் உள்ளிட்டோர் நடித்த முழுநீள நகைச்சுவை வெப்சீரிஸ் இது. தெலுங்கில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படும் தொடர் இது. 


R.I.P.D. 2: Rise of the Damned (2022):






ஹாலிவுட் ஆக்ஷன் காமெடி திரைப்படமான ரிப்-2, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்த வாரம் வெளியாக உள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தை பால் லைடன் இயக்கியுள்ளார். ஜெஃப்ரீ டொனாவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம், ஹாலிவுட் பிரியர்களுக்கு நல்ல படையலாக இருக்கும். 


இரவதம்:






 


சுஹாஸ் மீரா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகும் இத்திரைப்படம், த்ரில்லர் திரைப்படமாக வெளியாக உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் இத்திரைப்படம் ஐ.எம்.டி.பி., ரேட்டிங்கில் 8.2 மதிப்பெண்கள் பெற்று, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமர்தீப் செளத்ரி, அருண் ஜானு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். 


Christmas with You:






நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் மற்றொரு முழுநீள நகைச்சுவை திரைப்படம் கிறிஸ்துமஸ் வித் யூ. கேபிரில்லா டேக்லிவினி இயக்கத்தில் ஃப்ரிடி ப்ரின்ஸ் மற்றும் அமி கேர்ஜியா, கிரேஸ் டம்டவ் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம், காமெடி, குடும்பம், ட்ராமா ஆகிய மூன்று ஜானர்களில் உருவாகியுள்ளது.