அரசியலின் மோசம் என்று சொல்பவர்களும் அப்படி சொல்பவர்களுக்கு எதிராக வாதிடுபவர்களுக்கும் இடையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற இருக்கிறது.


நீயா நானா


அரசியலைப் பற்றி இரு வேறான கருத்துக்கள் நம் சமூகத்தில் காலம் காலமாக நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர் அரசியல் என்பது ஒரு சாக்கடை , அதிகாரத்திற்கான போட்டியில் எளிய மக்களை பகடைக்காயாக வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் நாடகமே அரசியல் என்று சொல்வது வழக்கம்.  சமூகத்தில் வர்க்கம் , சாதி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் என்பது எவ்வளவு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்று கூறுபவர்கள் இன்னொரு தரப்பினர். இந்த இரு தரப்பினருக்கு இடையிலான விவாதம் காலம் காலமாக நடந்து வருவது. இது தான் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியின் விவாதப் பொருள். ஒரு பக்கம் அரசியல் என்பது மோசம் என்று சொல்பவர்களும் அப்படி சொல்பவர்களை எதிர்க்கும் தரப்பினருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் இந்த நிகழ்ச்சியில் நடந்துள்ளது. 


மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் சமஸ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அனைவருக்கும் பிரியமான கோபிநாத் இந்த முறையும் இரு தரப்பினருக்கு இடையிலும் சுவாரஸ்யமான விவாதத்தை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கலாம் . அதற்கு சான்றாக அமைந்திருக்கும் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நீயா நானாவின் ப்ரோமோ.


அரசு இல்லாமல் ஒரு நாடு எப்படி இருக்க முடியும்






ஒரு பக்கம் தான் சாப்பிட்ட சாப்பாட்டில் இருந்து போடும் துணிகள் படித்த படிப்பு வரை தனக்கு அரசியல் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் என்று ஒருவர் வாதிட, இதெல்லாம் அரசியல் கொடுக்கவில்லை  நீங்கள் படித்த படிப்பு கொடுத்தது என்று இன்னொருவர் வாதிடுகிறார். இரு தரப்பினருக்கு இடையில் கோபிநாத் யாருக்கும் அதிரடியான கெளண்டர் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்க  நீயா நானா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 


 நீயா நானா நிகழ்ச்சி பற்றி


2006 ஆம் ஆண்டு முதல் கடந்த 18 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகு வரும் நிகழ்ச்சி  நீயா நானா. கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு சமூக பிரச்சனைகள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு உள்ளது