மோகினி ஆட்டம் ஆரம்பம்:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பும் மர்மமும் கலந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் மோகினி ஆட்டம் ஆரம்பம்.
கடந்த வாரம் வெளியான எபிசோடில் காலசர்பிகாவின் உண்மையான உருவம் தெரியவர, தியா நாகமணியைக் கண்டுபிடித்து அவளை எதிர்கொள்ள முன்வருகிறாள். தியாவும் நிஷாந்தியும் காலசர்பிகாவிடம் இருந்து தப்பிக்க, உமேஷ் மஹா அசூரரின் வருகையால் அதிர்ச்சியடைகிறார். தியா மோகனைப் பாதுகாக்க முன்வர, அவள் மஹா அசுரரின் கோபத்திற்கு உட்படுகிறாள். தியா மற்றும் நிஷாந்தி மோகனை காப்பாற்றுவதில் வெற்றி பெறுவார்களா? அல்லது மஹா அசூரரின் கோபம் அவர்களின் முயற்சிகளை தோற்கடிக்குமா என்பது முக்கிய திருப்பமாக இருந்தது.
இந்த வாரம்
மகா அசுரன் vs மோகன்: மோகினியை காப்பாற்றும் மோகன்!
மகா அசுரனின் சூனியம் கலந்த ஆப்பிளை சாப்பிட்டதால், மோகனின் உடல் சூடேறி உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. இதைப் பார்த்து தாங்க முடியாத நிஷாந்தி, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மந்திர சக்தியால் மோகனை குணப்படுத்த உதவுகிறாள்.
ஆனால், நிஷாந்தியின் உதவியை அறிந்த மோகன், எரிச்சலுடன் அவளது செயல்களை ஒப்புக்கொள்ள மறுக்க ஒருபுறம், மறுபுறம், கோவத்தில் மகா அசுரனை எதிர்கொள்ளும் நிஷாந்தி. மகா அசுரன், அவளை மந்திர சாம்ராஜ்யத்திற்கு அனுப்பி விடுகிறார். விஷ்வன், நிஷாந்தியை மீட்க மோகனின் உதவியை நாட, மோகன், வேறு வழியின்றி, அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.
மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கிறாள். அவள் குரலைக் கேட்டு மோகன் அவளைக் கண்டுபிடிக்கிறான். அனால் அவர்கள் அறியாது ஓர் மர்ம உருவம் ஒன்று அவர்களை நோட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த மந்திர சாம்ராஜ்யத்தில், மந்திரச் சூழலையும் மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, நிஷாந்தியை மீட்டு, மோகனும் நிஷாந்தியும் தப்பிப்பார்களா??
இந்த ஆவலூட்டும் நிகழ்வுகளை பார்த்து ரசிக்க, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தவறாமல் பாருங்கள்!