ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோயிலில் பூஜாவின் தலையில் தண்ணீர் ஊற்றி சக்தி முதல் மரியாதை செய்ய, பூஜா சந்தோஷப்படுகிறாள், பிறகு பூஜாவை பூ மிதிக்க அழைத்துச் செல்ல, அங்கே நெருப்பு இருப்பதை பார்த்த பூஜா அதிர்ச்சி அடைகிறாள்.
எல்லோரும் பூஜாவை தீ மிதிக்க சொல்ல, பூஜா கால் வைத்து பார்த்துவிட்டு திரும்பி வந்து விடுகிறாள். பிறகு தலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு ரோகித் பூஜாவின் தலையில் தேங்காய் உடைக்க பூஜா மயக்கம் அடைய, பூஜா கண் விழித்து பார்க்கும் போது முதல் மரியாதை சக்திக்கு செய்து பரிவட்டம் கட்டுகிறார்கள்.
சக்தி பூஜாவிடம் வந்து தனக்கு மரியாதை கிடைத்திருப்பதை சொல்லி பூஜாவை வெறுப்பேற்றி விட்டு செல்கிறாள். அடுத்ததாக மீனாட்சி வீட்டிற்கு ஒரு சாமியார் வருகிறார். சக்தியும் வெற்றியும் சேர்ந்து வாழ்க்கை வாழவில்லை என்றால் அவர்கள் பெரிய பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க வேண்டி வரும் என்று சொல்லி விட்டு போக மீனாட்சி அதிர்ச்சி ஆகிறாள். இப்படியான சூழலில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நிறைவடைந்தது.