மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி சங்கிலியை திருமணம் செய்ய சம்மதிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
முன்னதாக சக்தியை சங்கிலிக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெண் கேட்டு நீதிமணியும் புஷ்பாவும் மீனாட்சி வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால் மீனாட்சி அதை கேட்டு தாம்பூல தட்டை தூக்கி எறிவதோடு இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். உடனே சக்தியை நான் சங்கிலிக்கு எப்படியாவது திருமணம் முடித்து வைப்பேன் என புஷ்பா சபதம் எடுக்கிறார். பின்னர் சங்கிலி சக்தியை சந்தித்து நான் ஒரு ரவுடி தான் உன்னை திருமணம் செய்தால் இது எல்லாத்தையும் விடுவேன் என சொல்லி விருப்பம் தெரிவிக்கிறார்.
இனி இன்றைய எபிசோடில் சங்கிலி சக்தியை பார்த்து வெற்றி தான் திருமணத்தை நிறுத்துவதற்கு காரணம் என பழி போடுகிறார். இதனால் சக்தி வெற்றியை நம்பாமல் சங்கிலியை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். இதனை வெற்றி தன்னுடைய நண்பனிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறான். மேலும் சக்தி சங்கிலியை திருமணம் செய்ய சம்மதம் சொன்னாள் என்று மீனாட்சியிடம் சாந்தா விஷயத்தை சொல்கிறாள்.
இதைக்கேட்டதும் சக்தியிடம் இதுபற்றி கேட்டு சங்கிலியை திருமணம் செய்யக்கூடாது என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கண்டிக்கிறாள். ஆனால் சக்தி தான் எடுத்த முடிவு யமுனாவின் வாழ்க்கைக்காக தான் என்று சொல்ல, கோபத்தில் மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.