Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு துலாபாரம் செய்ய மாரி வேண்டி இருந்த நிலையில், எல்லோரும் கோயிலுக்கு வந்திருக்க தராசு தட்டில் பவர் கனெக்ஷனை கொடுத்து ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மாரி குழந்தையை தராசு தட்டில் வைக்கும் சமயத்தில் அங்கு வந்த பாம்பு பவர் கனெக்ஷனை எடுத்து விட குழந்தைக்கு ஒன்றும் ஆகாமல் இருக்க, சங்கரபாண்டியும் தாராவும் குழப்பம் அடைகின்றனர். பிறகு சங்கரபாண்டி ஸ்விட்ச் போர்ட் அருகே எல்லாம் சரியாக இருக்க அந்த விஷயத்தை தாராவிடம் சொல்கிறான்.
பிறகு தாரா வந்து “ஏன் ஷாக் அடிக்கல?” என்று ஸ்விட்சைத் தொட அவளுக்கு ஷாக் அடிக்கிறது. இதனையடுத்து தாரா கையில் கட்டுடன் வர, ஸ்ரீஜா “என்ன ஆச்சு அத்தை, தொடர்ந்து உங்க கையில் அடிபட்டுட்டே இருக்கு, என்ன காரணம்? இந்தக் குழந்தை வந்ததில் இருந்தே இப்படி தான் இருக்கு, ராசி கெட்ட குழந்தை” என்று சொல்கிறாள்.
பிறகு வீட்டிற்கு ஜோசியர் வர தாரா குழந்தைகளுக்கு ஜாதகம் எழுத வேண்டும் என்று சொல்கிறாள். ஹாசினியின் குழந்தைக்கும் ஸ்ரீஜாவின் குழந்தைக்கும் ஜாதகம் எழுதுவது போல் மாரி சாஸ்திரி குழந்தைக்கும் ஜாதகம் எழுதி விடலாம் என்று சொல்கிறாள். ஜோசியர் அதுக்கு பிறந்த தேதியும் நேரமும் வேண்டும் சொல்கிறார்.
மாரி எங்களுக்கு தெரியாது என்று சாஸ்திரிக்கு போன் செய்து குழந்தை பிறந்த நேரத்தைக் கேட்க, அவருக்கும் தெரியாது என்பதால் குழந்தை கிடைத்த தேதியையும் நேரத்தையும் சொல்கிறார். இதைக் கேட்டதும் “இதே டைமில் தான் நம்ம குழந்தை காணாமல் போச்சு” என இருவரின் முகமும் மாறுகிறது. அடுத்து “குழந்தைங்க வீட்டுக்கு வந்ததில் இருந்தே பிரச்சனையா இருக்குன்னா ஒரு பாத்திரத்தில் எண்ணையை வைத்து அதில் குழந்தைகள் முகத்தை காட்டினால் தோஷம் எல்லாம் போய் விடும்” என்று சொல்ல, எல்லா குழந்தைகளுக்கும் இதை செய்ய முடிவு செய்கின்றனர். தாரா முதலில் ஹாசினி குழந்தையை வாங்கி இந்த பரிகாரத்தை செய்கிறாள்.
அடுத்து ஸ்ரீஜாவின் குழந்தையை வாங்கி பரிகாரத்தை செய்து முடிக்கிறாள், இறுதியாக மாரியின் குழந்தையை வாங்கி எண்ணெய்யில் காட்ட அதில் தேவியின் முகம் தெரிகிறது. “கூடிய சீக்கிரம் உன்னை கொல்லுவேன்” என்று தேவி சொல்ல தாரா அதிர்ச்சி அடைந்து சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.