Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தை ஆட்டோ ஸ்டாண்ட் தலைவி பொம்மியிடம் வந்து சேந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, பொம்மி குழந்தையை வைத்திருக்கும் நேரத்தில் அவளுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் பொம்மியின் தோழி லேடிஸ் ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர பொம்மி குழந்தையுடன் பதறியடித்து ஓடி வருகிறாள். அப்போது இறந்து கிடக்கும் பெண்ணின் மீது குழந்தையின் கை பட்டதும் உயிர் வந்து விடுகிறது.
"ஏன் டி இப்படி பண்ண?" என்ற பொம்மி கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து இருப்பதாக லெட்டர் வர எல்லாம் குழந்தை வந்த நேரம் என்று சந்தோசப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து குழந்தை லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் விஷயத்தை அறிந்த கதிரேசன், சுந்தரேசன் ஆகியோர் லேடிஸ் கெட்டப்பில் வந்து அது எங்களுடைய குழந்தை என்று நம்ப வைத்து குழந்தையை வாங்குகின்றனர்.
இந்த நேரத்தில் குழந்தை அவர்களது விக்கை பிடுங்கி விட இவர்கள் வேஷம் போட்டு வந்து இருப்பது அறிந்து அவர்களை துரத்திச் செல்கின்றனர். மறுபக்கம் மாரியின் தோழி மீனா கோயிலில் மாரி சொன்ன பரிகாரத்தை செய்து கொண்டிருக்க ரவுடிகள் துரத்தி வருபவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தையை கோயிலில் வைத்து விட்டு எஸ்கேப் ஆகுகின்றனர், இதையடுத்து அந்தக் குழந்தை மீனாவின் கையில் கிடைக்க அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.
குழந்தையை பார்த்த சகுந்தலாவின் அம்மா “இது தாரா தேடுற குழந்தை மாதிரியே இருக்கே” என்று சந்தேகப்பட்டு போட்டோ எடுத்து தாராவுக்கு அனுப்பி வைக்க அவளும் இதே குழந்தை தான் என்று உறுதி செய்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.