ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி நவீன் மற்றும் துர்காவை கோவிலுக்குள் அடைத்து வைத்து இருக்க கார்த்திக் காப்பாற்றினான். இந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

துர்காவை அறைந்த ரேவதி:

அதாவது, கோவிலுக்குள் பூட்டப்பட்டிருந்த துர்கா மற்றும் நவீனை  பின்பக்க வழியாக காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறான். அதன் பிறகு துர்காவை வீட்டிற்கு அழைத்து வர ரேவதி அவளிடம் கோபப்பட்டு அறைகிறாள். இன்னொரு முறை இப்படி பண்ணாத உனக்கும் நவீனுக்கும் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறாள்‌.

அதன் பிறகு கார்த்தியின் அத்தை தேர்தலில் நிற்பதால் எதுவாக இருந்தாலும் பார்த்து தான் செய்யணும் இதனால் பிரச்சனை வரும் என்று அட்வைஸ் கொடுக்கிறான். கார்த்திக் துர்கா நவீன காப்பாற்றிய விஷயம் அறிந்த சிவனாண்டி அடுத்த திட்டமாக நவீனை கடத்தல் அவனது ரூமுக்கு கிளம்பி செல்கிறான். 

சந்திரகலா கார்த்திக் சவால்:

ஆனால் சிவனாண்டிக்கு முன்பாக கார்த்திக் அங்கு வந்து நவீனை காப்பாற்றுகிறான். சிவனாண்டியை அடித்து ஓட விட்டு நவீனுக்கும் துர்காவுக்கு தான் நிச்சயம் நடக்கும் என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறான். 

சந்திரகலா அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று சவால் விட கார்த்திக் நடத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். ஒருவேளை இந்த சவாலில் ஜெயித்து விட்டால் நீ சிவனாண்டியுடன் போய் வாழுற வழியை பார்க்கணும் என்று கார்த்திக் கண்டிஷன் போடுகிறான். 

உண்மையை ஒப்புக்கொள்வானா கார்த்திக்?

சந்திரகலா அப்படி நீ தோற்று போனால் சாமுண்டீஸ்வரியிடம் நீதான் ராஜா சேதுபதியின் பேரன்.. அபிராமியின் மகன், இந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக வந்திருக்கும் உண்மையை சொல்ல வேண்டும் என்று சவால் விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதைப் பார்க்க இன்றைய எபிசோடில் காணலாம்.