ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா கொலுசு கார்த்தியின் கையில் கிடைத்த நிலையில், வீட்டில் எல்லோரும் என்ன நடந்துச்சு என்று விசாரித்துக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து கார்த்திக் வர அமைதியாகி விடுகின்றனர்.
பிறகு கார்த்திக் காபி கேட்டு ரூமுக்கு சென்று சித்தர் சொன்ன விஷயங்களை நினைத்துப் பார்க்க, ஒரு வேளை அந்தப் பாடகி தீபாவாக இருக்குமோ என்று யோசிக்கிறான். பிறகு தீபாவின் காலில் ஒரே ஒரு கொலுசு மட்டும் இருந்தால் அது தீபா தான் என உறுதி செய்து விடலாம் என்று தூங்கிக் கொண்டிருக்கும் தீபாவளி சென்று பார்க்க, அவளது இரண்டு காலிலும் கொலுசு இருக்கிறது.
பிளாஷ்பேக்கில் தீபா கால் கொலுசு இல்லாமல் இருப்பதை கவனித்த மைதிலி, தன்னுடைய கொலுசைக் கழட்டி போட்டது தெரிய வருகிறது. மறுநாள் கார்த்திக் ரூபஸ்ரீ வீட்டிற்கு வந்து “கோயில் திருவிழாவில் பாடியது நீ இல்லை என்பது எனக்கு தெரியும்” என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறாள்.
இருந்தாலும் என்ன சொல்றீங்க என்று சமாளிக்க முயற்சி செய்ய, சரி இப்போ ஒரு பாட்டு பாடு என்று சொல்ல, இப்ப எனக்கு எனர்ஜி இல்லை பாட முடியாது என்று சொல்ல, “கார்த்திக் உண்மைய சொல்லு, நீ ஒரு ஆள் வைத்து நான் பாடின என்பது எனக்கு தெரியும்” என அதிர்ச்சி தருகிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.