ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 


இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவுக்கு போன் செய்து “கார்த்தியோட பிறந்தநாள் பார்ட்டிக்கு பாட வருகிறோம்” என சொன்னாள். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் தன்னுடைய பாட்டி கோகிலாவுடன் ரூபஸ்ரீ பாடுவதற்காக வந்து இறங்க, அவளை எல்லோரும் வரவேற்கின்றனர். ‘ராஜஸ்ரீ எங்கே?’ என கேட்க அம்மா ஒரு முக்கியமான விஷயமாக வெளியே சென்று இருப்பதாக சொல்லி சமாளிக்கின்றனர். 


அதன் பிறகு ரூபஸ்ரீ கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, இதைப் பார்த்த தீபா “எல்லாரும் வாழ்த்து சொல்றாங்க, என்னால பக்கத்துல இருந்து கூட வாழ்த்து சொல்ல முடியலையே” என வருத்தப்படுகிறாள். அந்த சமயம் பார்த்து அங்கு வரும் ஒரு சின்ன பையன் தனக்கு பலூன் ஊதி கொடுக்குமாறு சொல்ல தீபாவும் ஊதி கொடுக்க இன்னும் பெருசா ஊதுங்க என சொல்கிறான்.




தீபா திரும்பவும் பலூனை வாங்க, அது காற்றில் பறந்து கார்த்தியின் பக்கத்தில் வந்து விழ, அந்த பையன் கார்த்தியை “இந்த பலூனை இன்னும் பெருசா ஊதி கொடுங்க” என சொல்ல, அவன் ஊதி கொடுக்கிறான். பிறகு தீபா அந்த சின்ன பையனிடம் இருந்து அந்த பலூனை தனக்கு வேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொள்கிறாள். இதையெல்லாம் பார்த்து நட்சத்திரா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடுப்பாகின்றனர். 


இன்னொரு பக்கம் கோயிலில் சரஸ்வதி என்ற கேரக்டர் கார்த்தியின் பெயரில் பூஜை செய்து நேராக கார்த்தியின் பிறந்தநாள் பங்ஷனுக்கு வந்து இறங்குகிறார். அபிராமியுடன் இருக்கும் அருணாச்சலம் சரஸ்வதியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து போய், “அந்த கேக் எல்லாம் ரெடியாகி விட்டதா பாரு” என்று அபிராமியை அனுப்பி வைத்துவிட்டு சரஸ்வதியிடம் வந்து பேசுகிறார். 


“நீ எதுக்கு இங்க வந்த? உன்னை யார் வர சொன்னது?” எனக் கேள்வி எழுப்ப, “நான் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்று விடுகிறேன்” என சொல்ல, சரி இங்கேயே வெயிட் பண்ணு என்று அருணாச்சலம் உள்ளே செல்கிறார். இதைத்தொடர்ந்து அருண், சரஸ்வதியை பார்த்து விட்டு “யார் நீங்கள்? எதற்காக இங்கு காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்க கார்த்திக்கு தெரிஞ்சவங்க தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்ததாக சொல்கிறான். அவன் சரி உள்ள வாங்க என உள்ளே அழைத்துச் செல்கிறான். 


யார் இந்த சரஸ்வதி? அடுத்ததாக நடக்கப் போவது என்ன எனும் சஸ்பென்ஸ் உடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.