சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தை பல மாதங்களாக தக்க வைத்து வந்தது. ஆனால் அந்த தொடரின் பிரதான கதாபாத்திரமான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிய துவங்கியது. இருப்பினும் கதைக்களத்தில் சில மாற்றங்களுடன் சமீபகாலமாக மக்களின் கவனத்தை பெற போராடி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். 



நடிகர் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். அவர் ஆதி குணசேகரனாக வந்த பிறகு கதைக்களம் அவருக்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வந்ததால் டி.ஆர்.பி வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 


 




இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தங்கைக்காக ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. "வரும் நாட்களில் நான் புது ப்ரஜெக்ட்டில் நடிக்க விரும்புகிறேன். ஏற்கனவே என்னை தொடர்பு கொண்டவர்கள், நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டவர்கள் என்னை மெயில் மூலம் அணுகலாம்" என போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த போஸ்ட் பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆதிரை எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகுகிறாரா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 



அதற்கு பதில் அளித்த சத்யா தேவராஜன் "யூடியூபுக்கு கன்டென்ட் கொடுக்காதீங்க... இப்போது வரை நான் விலகவில்லை. அப்படி விலகுவதனால் தெரிவிக்கிறேன்" என பதில் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 


 



 


அதிரை என்ற கதாபாத்திரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்நீச்சல் கதைக்களம் முழுவதும் அவரை சுற்றியே நகர்ந்தது. ஆதிரை காதலித்த அருணை விபத்தில் சிக்க வைத்து அவனுடைய கால்களை உடைத்து முடக்கினார் குணசேகரன். ஆதிரையை வலுக்கட்டாயமா கரிகாலனுக்கு நடுரோட்டில் வைத்து திருமணம் செய்து வைத்தார். தங்கை என்றும் பாராமல் ஆதிரையை ஒரு முட்டாள் மாப்பிளைக்கு வீம்புக்காகவும் கௌரவத்திற்காகவும் திருமணம் செய்து வைத்தார். அதை அனைத்தையும் தகர்த்து எறிந்து துணிச்சலுடன் அண்ணனை எதிர்த்து காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தாள் ஆதிரை. 


ஆதிரை கேரக்டரை நன்றாக உள்வாங்கி அதற்கு ஏற்றார் போல் சிறப்பாக நடித்து வந்த சத்யா தேவராஜுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சத்யா ஏராளமான போஸ்ட்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறார். விரைவில் சத்யா தேவராஜை வேறு ஒரு சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம்.